பிரபல சின்னத்திரை தொகுப்பாளரான திவ்யதர்ஷினி என்கிற டிடி தனது சிறு வயது முதலே தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பாளராக செயல்பட்டு வரும் இவர் திரைப்பட இசை வெளியீட்டுவிழா, பரிசளிப்பு விழா போன்றவற்றையும் தொகுத்து வழங்கியிருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே தொகுப்பாளராக அவர் வெற்றி கண்டிருந்தாலும் அவரது திருமண வாழ்க்கை என்பது சோகமான ஒரு கதையாகவே இருந்து வருகிறது.

ஏனெனில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது நெருங்கிய நண்பரான ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட டிடி வெகு விரைவாகவே அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின்னர் முறையாக விவாகரத்தும் பெற்றுக் கொண்டார்.
தற்போது 38 வயதாகும் டிடி இன்றளவும் சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையே ஏற்கனவே இவருக்கு இரண்டாம் திருமணம் நடைபெறப்போகிறது என்றும் அந்த மாப்பிள்ளை இவர்தான் என்றும் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளத்தில் உலா வந்தன. அப்போதெல்லாம் டிடி தனது இரண்டாம் திருமணம் குறித்த எந்த ஒரு கருத்தையும், விளக்கத்தையும் அளிக்கவில்லை.

ஆனாலும் டிடி இன்றளவும் தனது தொகுப்பாளர் பணியை விரும்பி செய்து வருகிறார். அதோடு தனக்கு காலில் ஏற்பட்ட ஒரு பிரச்சனைக்காகவும் அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்படும் தனது திருமணம் குறித்து கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக டிடி சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டி ஒன்றில் கூறியதாவது : எனது திருமணம் நடந்தால் வெளியே தெரியப்போகிறது. திருமணம் என்பது சாதனை அல்ல.
பத்து வருடத்திற்கு முன் திருமணம் குறித்து இருந்த புரிதல் எனக்கு இப்போது மாறி இருக்கிறது. எல்லோருக்கும் திருமணம் அவசிய தேவையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. சோசியல் மீடியாவில் வரும் எந்த ஒரு செய்திகள் பற்றியும் நான் கவலைப்படமாட்டேன். தற்போதைக்கு நான் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இல்லை என அனைத்து வதந்திகளுக்கும் டிடி முற்றுப்புள்ளி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.





