- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய், கமல், ஷாருக்கானை தொடர்ந்து கார்த்தியுடன் மோதும் விஜய் சேதுபதி... கச்சிதமாக கதையை எழுதி முடித்த...

விஜய், கமல், ஷாருக்கானை தொடர்ந்து கார்த்தியுடன் மோதும் விஜய் சேதுபதி… கச்சிதமாக கதையை எழுதி முடித்த சூப்பர் ஹிட் இயக்குனர்…

- Advertisement -

பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பெற்றவர் விஜய் சேதுபதி.ஆரம்பத்தில் புதுப்பேட்டை, நான் மகான் அல்ல, சுந்தர பாண்டியன் ஆகிய திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் வந்து போன விஜய் சேதுபதி, தனது கடின உழைப்பினாலும்,யதார்த்தமான நடிப்பினாலும் ஊரறியும் மக்கள் செல்வனாக உருவெடுத்தார். நானும் ரவுடிதான், தர்மதுரை உள்ளிட்ட தரமான படங்களை கொடுத்த விஜய் சேதுபதி, தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

வருடா வருடம் அவரது படங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனாலும், சொல்லிக் கொள்ளும் படியாக ஒரு படம் கூட அமையவில்லையே என்று பலரும் கூறி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும், தனது நடிப்பில் எந்த குறையும் வைக்காத விஜய் சேதுபதி,ஒவ்வொரு படத்திலும் தனது ரசிகர்களை ஏதாவது ஒரு விதத்தில் குஷிப்படுத்தி வருகிறார். குறிப்பாக விஜய் சேதுபதியின் வில்லத்தனமான கதாபாத்திரத்தை கூறலாம்.

தமிழ் சினிமாவில் மாஸ்டர் திரைப்படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி, பவானி கதாபாத்திரத்தில் பட்டையை கிளப்பி இருந்தார். குறிப்பாக, அந்த படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் சேதுபதியிடம் கோபமாக செல்போனில் பேசி தளபதி விஜய் கண்ணீர் வடிக்க, அந்தப் பக்கம் நுரை ததும்பிய ஷாம்பு தலையுடன் மிரட்டிய பவானியையே பலரும் ரசித்தனர். மாஸ்டர் திரைப்படத்தில் தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டினார்.

Vijay Sethupathi

கதாநாயகன் என்பதை தாண்டி வில்லன் விஜய் சேதுபதிக்கு கிடைத்த ஏகோபித்த வரவேற்பே, அவரை பாலிவுட் வரை அழைத்து சென்றது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தமிழ் ரசிகர்கள் பலரும் ஷாருக்கானை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தையே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படி விஜய், கமல்ஹாசன், ஷாருக்கானுக்கு வில்லனாக போட்டி போட்ட விஜய் சேதுபதி, அடுத்ததாக கார்த்தியுடன் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த தீபாவளியன்று கார்த்தி நடிப்பில் உருவான சர்தார் திரைப்படம், ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளியது. அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக வெளியாகும் என்று இயக்குனர் பி எஸ் மித்ரன் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அதற்கான பணிகளில் முழு வீச்சில் அவர் ஈடுபட்டு வருகிறார். இதற்கான கதையும் தயாராகி உள்ள நிலையில், படத்தில் கார்த்திக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க வைக்க அவர் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு விஜய் சேதுபதி சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள கார்த்தி விஜய் சேதுபதி ரசிகர்கள், படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

சற்று முன்