- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது, நான் சூஸ் பண்ணி வந்த லைன் இல்லை, நான் ஆசைப்பட்டதே வேற, கடைசியில மேசேஜ்...

இது, நான் சூஸ் பண்ணி வந்த லைன் இல்லை, நான் ஆசைப்பட்டதே வேற, கடைசியில மேசேஜ் சொல்ற படமுன்னு சொல்லி இப்படி பண்ணீட்டாங்க – மாஜி கிளாமர் க்யூன் சோக கதை இதுவா

- Advertisement -

தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்ட நடிகர், நடிகையரை விட ஓரிரு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனவர்கள் ஏராளமாக உள்ளனர். நல்ல நடிப்பாற்றல், திறமை, அழகு இருந்தாலும் சினிமாவில் தொடர்ந்து நீடித்திருக்க நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருக்க வேண்டும் என, பலரும் கூறுவதுண்டு.

அதே வேளையில், கிடைத்த வாய்ப்பை எப்படியாவது பற்றிக்கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயம் பல நடிகர், நடிகையருக்கு ஏற்படுகிறது. அப்படித்தான் பல துணை நடிகர்கள் இன்னும் தமிழ் சினிமாவில் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், கிளாமர் நடிகையாக ஒரு படத்தில் நடிக்கும் பட்சத்தில், அதே மாதிரியான கிளாமர் ரோல்களில் அடுத்தடுத்து நடிக்க நேரிடும். பிறகு, கேரக்டர் ரோல், ஹீரோயின் என்பதெல்லாம் வெறும் கனவாகவே போய்விடும்.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், இதுகுறித்து நடிகை ஷகிலா கூறியதாவது, நான் சினிமாவில் நடிக்க வந்த போது, அது செக்ஸ் எஷூகேட் பண்ற மாதிரியான மெசேஜ் சொல்கிற படம் என்று சொல்லித்தான், என்னை அந்த படத்தில் நடிக்க வைத்தனர். அதுவும் சில்க் ஸ்மிதாவின் தங்கை கேரக்டர் என்பதால், அவருக்கு தான் படத்தில் முக்கியத்துவம் என்று நினைத்துதான் சம்மதித்தேன்.

ஏனென்றால், படத்தில் மெயின் ஹீரோயின் சில்க் ஸ்மிதா என்பதால், அவரோட ரோல் மட்டுமே முக்கியமானதாக இருக்கும். அவருக்கு தங்கையாக நடிப்பதால், எனக்கென்று பெரியதாக நடிக்க வாய்ப்பு எதுவும் இருக்காது என்று நம்பினேன். அதேபோல், படத்தை துவங்குவதற்கு முன்பே, இது ஒரு செக்ஸ் எஜூகேட்டட் பிலிம் என்று சொன்னதாலும்தான் நடித்தேன்.

- Advertisement -

ஆனால், அந்த படத்தில் நடித்த போதுதான் அந்த படத்தின் கதை என்னையே மையப்படுத்தியது என புரிந்தது. அதாவது, திருமணமான இளம் தம்பதி, ஒரு வீட்டில் காதல் வசப்பட்டு இருக்கும்போது, அந்த வீட்டுக்குள் பருவ பெண் ஒருத்தி இருந்தால், என்ன மாதிரியான பாதிப்புகளை சந்திப்பாள் என்ற ரீதியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த படம் எஜூகேட் படமா, மோசமான படமா என்பது பார்வையாளர்களை பொருத்தது என்றாலும், இது நான் சூஸ் பண்ணி வந்த லைன் இல்லை. என்னோட புரபஷனலா நான் சூஸ் பண்ணி இருந்ததே வேற. போலீஸ் ஆபீசர் ஆகணும்ங்கறதுதான் என்னோட ஆசை. நான் பத்தாவது படிக்கும்போதே, நல்ல உயரமா, நல்ல உடல்தோற்றத்தோட கம்பீரமாக இருப்பேன். எனவே, போலீஸ் ஆபிசர்தான் என்னோட கனவாக இருந்தது, என்று கூறி இருக்கிறார் ஷகிலா.

- Advertisement -

சற்று முன்