- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரை நூற்றாண்டு கால திரையிசை பயணம் - இசைஞானி இளையராஜாவுக்கு அரசு விழா நடத்தும் என...

அரை நூற்றாண்டு கால திரையிசை பயணம் – இசைஞானி இளையராஜாவுக்கு அரசு விழா நடத்தும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 47 ஆண்டுகளாக இசையமைப்பாளராக 1300 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இளையராஜா. பல ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசை தந்தவர். ரசிகர்களால் இசைஞானி என கொண்டாடப்பட்டு வருகிறார்.

இளையராஜாவை பொருத்த வரை 82 வயது கடந்த நிலையிலும் அவரது இசை ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை. இன்னும் பல பாடல்களை அவரே எழுதி இசையமைத்து அவரே தனது சொந்தக் குரலில் பாடவும் செய்கிறார். சமீபத்தில் விடுதலை 2 படத்தில் அவரே எழுதி இசையமைத்து பாடிய தெனம் தெனமும் உன் நினைப்பு என்னை வதைக்கிறதே என்ற பாடல் பெரிய அளவில் ரசிகர்களிடம் டிரண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 8ம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கில் வேலியன்ட் சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா, 2 தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து இசைஞானி இளையராஜா, சென்னையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு நேரில் சென்று அவரை நேரில் சந்தித்தார். அப்போது ஸ்டாலின் மனைவி துர்காவும் உடனிருந்தார். லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் குறித்து பல விஷயங்களை முதல்வர் ஸ்டாலினுடன், இளையராஜா பகிர்ந்துக் கொண்டார்.

- Advertisement -

இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, லண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பி உள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார்.

அவரது அரை நூற்றாண்டு கால திரை இசை பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம். ராஜாவின் இசை ராஜ்யத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும் என்று அந்த பதிவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது இசைஞானி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்