- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவ்ளோதான்… நம்மள முடிச்சு உட்டுட்டீங்க போங்க, கதறாத குறையாக நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனம் -...

அவ்ளோதான்… நம்மள முடிச்சு உட்டுட்டீங்க போங்க, கதறாத குறையாக நெருக்கடியில் சிக்கிய லைகா நிறுவனம் – விடாமுயற்சி பஞ்சாயத்து இன்னும் ஓயலையா?

- Advertisement -

ஒரு கதை திரைப்படமாகி உருவாகி திரைக்கு வருவது இயக்குனர்கள், நடிகர்கள் கையில்தான் இருப்பதாக ரசிகர்கள் பெரும்பாலும் நினைக்கின்றனர். ஆனால் உண்மை நிலவரம் அதுவல்ல. ஒரு கதை திரைப்படமாக உருவாக முக்கிய காரணமாக, முதுகெலும்பாக இருப்பது தயாரிப்பாளர்தான். ஒரு படத்தின் ஆணிவேர் தயாரிப்பு நிறுவனம்தான்.

இயக்குனர் சொல்லும் கதையை நம்பி, அதில் நடிக்கும் கலைஞர்கள், படத்தை உருவாக்கும் தொழில்நுட்ப கலைஞர்களை நம்பி பல கோடி ரூபாயை முதலீடு செய்பவர் தயாரிப்பாளர்தான். ஒருவேளை படம் ஜெயித்து விட்டால் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுவிட்டால் தயாரிப்பாளர் லாபமடைவார். ஒருவேளை படம் பிளாப் ஆகிவிட்டால் தயாரிப்பாளர்தான் நஷ்டத்தை ஏற்க வேண்டும்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டில் கத்தி படம் மூலம் தயாரிப்பு நிறுவனமாக நுழைந்தது லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம். கோலமாவு கோகிலா வட சென்னை 2.0 வந்தா ராஜாவா தான் வருவேன் காப்பான் தர்பார் பன்னிக்குட்டி ராங்கி பொன்னியில் செல்வன் 1 மற்றும் 2 லால் சலாம் வேட்டையன் இந்தியன் 2 உள்ளிட்ட பல படங்களை தயாரித்தது.

ஆனால் இதில் சில படங்கள் தவிர பெரும்பாலான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. குறிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தியன் 2 லால் சலாம் தர்பார் காப்பான் போன்ற பல படங்கள் லைகா நிறுவனத்துக்கு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இந்த நஷ்டங்களால் லைகா நிறுவனம் பெரிய அளவில் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் விடாமுயற்சி படத்தை லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்த நிலையில், இந்த படத்தின் கதை பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் கதையாகும். அதனால் பாரமவுண்டன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 13 கோடி வரை தர வேண்டிய சூழ்நிலையில் லைகா புரடக்சன்ஸ் தற்போது இருந்து வருகிறது. விடாமுயற்சி படம் நாளை மறுதினம் ரிலீஸாக உள்ள நிலையில், அதற்குள் ரூ. 13 கோடியை செட்டில் செய்ய வேண்டிய நிலையில் லைகா நிறுவனம் உள்ளது.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறுகையில், லைகா நிறுவனம் பெரிய நிதி நெருக்கடியில் இருந்து வருகிறது. கடந்த 4 மாதங்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கே சம்பளம் பாக்கி என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை வெளியிட பாரமவுண்டன் நிறுவனத்துக்கு ரூ. 13 கோடியை தர வேண்டிய நெருக்கடியை, லைகா எப்படி சமாளிக்க போகிறது எனத் தெரியவில்லை, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்