- Advertisement -
Homeபொழுதுபோக்குடிமாண்டி காலனி 2 கடந்த 15 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடியா? - 2ம் பாகம்...

டிமாண்டி காலனி 2 கடந்த 15 நாட்களில் வசூலித்தது இத்தனை கோடியா? – 2ம் பாகம் தோல்வி சென்டிமென்டை அடித்து நொறுக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்து

- Advertisement -

கடந்த 2015ம் ஆண்டில் வெளியான படம் டிமாண்டி காலனி. அஜய் ஞானமுத்து இயக்கிய இந்த படம் திரில்லர் படமாக இருந்தது. அருள்நிதி, ராம்திலக், யோகிபாபு, ஜாங்கிரி மதுமிதா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. டிமாண்டி காலனி வீட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் 4 இளைஞர்கள் மர்மமாக கொல்லப்படுவதுதான் இந்த படத்தின் கதை.

டிமாண்டி காலனி படத்தில் 30 நிமிடங்களுக்கு பிறகு துவங்கும் திகில் காட்சிகள் படம் முடியும் வரை நீடிக்கும். ரசிகர்களை சீட் நுனியில் பரபரக்கும் மனதுடன் உட்கார வைத்த டைரக்டர் அஜய் ஞானமுத்து, தனது இயக்கத்தில் உருவான டிமாண்டி காலனி 2ம் பாகத்திலும் அதே விறுவிறுப்பும், பரபரப்பும் குறையாமல் படத்தை தந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறார்.

- Advertisement -

வழக்கமாக 2ம் பாகம் படங்கள் என்றாலே சொதப்பி விடும். எதிர்பார்த்த வெற்றி இருக்காது என தமிழ் சினிமாவில் ஒரு சென்டிமென்ட் இருந்து வருகிறது. அதை பல படங்கள் 2ம் பாகமாக வந்து நிரூபித்தும் இருக்கின்றன. சமீபத்திய உதாரணமாக இந்தியன் 2, பொன்னியின் செல்வன் 2, சண்டக்கோழி 2 படங்களை சொல்லலாம். இதில் விதிவிலக்காக பாகுபலி 2, சிங்கம் 2 என சில படங்களும் இருக்கின்றன.

அதே போல் 2ம் பாகம் தோல்வி படமாக இருக்கும் என்ற சென்டிமென்டை அடித்து நொறுக்கி டிமாண்டி காலனி 2 படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக தந்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து. படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் போன்றவர்களின் நடிப்பு வேற லெவலில் இருந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அடுத்தது என்ன அடுத்தது என்ன என ரசிகர்களை விறுவிறுக்க செய்துவிட்டார் அஜய் ஞானமுத்து.

- Advertisement -

இந்த படத்தில் பிரியா பவானி ஷங்கர் நடிப்பு, தரமாக இருந்தது. இதில் அவருக்கான காட்சிகளும், அவரது நடிப்பும் வேற லெவலில் இருந்தது. சிறந்த நடிப்பில் பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ரசிகர்களின் மனங்களை வென்றுவிட்டார் என்பதில் சந்தேகமே இல்லை. நாயகன் அருள்நிதியை காட்டிலும் நடிப்பில் அதிகமாக ஸ்கோர் செய்தது பிரியா பவானி ஷங்கர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்