- Advertisement -
Homeபொழுதுபோக்குவிறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ள தக்லைப் ஷூட்டிங், அமெரிக்கா பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்த கமல்ஹாசன்...

விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ள தக்லைப் ஷூட்டிங், அமெரிக்கா பயணத் திட்டத்தில் திடீர் மாற்றம் செய்த கமல்ஹாசன் – அடுத்த படத்தில் நடக்கப் போவது என்ன?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 70 வயதை நெருங்கிக்கொண்டு இருக்கும் கமல்ஹாசனும் பிஸியாக இருக்கிறார். 73 வயதான ரஜினிகாந்தும் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கிறார். ஜூனியர்கள் விஜய், அஜீத்குமார் போலவே சீனியர்கள் ரஜினி, கமலும் தங்களது களத்தை விட்டுவிடாமல் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிரடி ஆக்‌ஷன் ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.

ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வேட்டையன் வர இருக்கிறது. கூலி படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்து ஜெயிலர் 2 படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. இப்படி அடுத்தடுத்த லைன் அப்களில் ரஜினிகாந்த் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். கமலும் அதே போல் தக்லைப் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.

வருகிற 20ம் தேதி வரை இன்னும் 2 வாரங்களுக்கு கமல் நடிக்க வேண்டிய காட்சிகள் படம்பிடிக்கப்படுகின்றன. அத்துடன் கமல் நடிக்க வேண்டிய போர்ஷன் அனைத்தும் நிறைவடைகிறது. அதன்பிறகு 5 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடக்கும் நிலையில், வரும் 25ம் தேதியுடன் தக்லைப் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து பூசணிக்காய் உடைத்து விடுகின்றனர். அதன்பிறகு போஸ்ட் புரடக்சன் பணிகள் நடக்க உள்ளன.

தக்லைப் படத்தை முடித்துவிட்டு, நடிகர் கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் டைரக்‌ஷனில் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் அதிரடி படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். 70 வயதை நெருங்கும் நிலையில், 25 வயது இளைஞர் போல இந்த படத்தில் கமல் நடிப்பில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் வெறித்தனமாக இருக்கும் என்றும் பேசப்படுகிறது.

இதற்கிடையே கமல்ஹாசன் அமெரிக்காவில் 90 நாட்கள் அதாவது தொடர்ந்து 3 மாதங்கள் அங்கேயே தங்கி ஏஐ தொழில்நுட்பம் குறித்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிட்டு இருந்தார். அதனால்தான் விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியை கூட விட்டு வெளியேறினார். ஆனால் இப்போது அமெரிக்கா பயண திட்டத்தில் மாற்றம் செய்துள்ளார் கமல்ஹாசன்.

அதன்படி அமெரிக்காவில் 90 நாட்களுக்கு பதில் 45 நாட்கள் மட்டுமே ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் பங்கேற்று சென்னை திரும்பி விடுகிறார். அதன்பிறகு அன்பறிவ் மாஸ்டர்கள் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலில் ஏஐ தொழில்நுட்ப பயிற்சியில் பெற்ற அனைத்து வித்தைகளையும் கமல் காட்ட ஆர்வம் காட்டுவார் என்பதால், அந்த படம் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வந்துவிட்டது.

சற்று முன்