லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள “லியோ” திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தமிழ் சினிமா ரசிகர்கள் இத்திரைப்படத்திற்காக ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

லோகேஷ் கனகராஜ்ஜிற்கென்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது. “மாநகரம்” திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பின் அவர் இயக்கிய “கைதி” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது.
“கைதி” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தார் லோகேஷ் கனகராஜ். அதன் பின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் இயக்குனராக திகழ்ந்தார் லோகேஷ் கனகராஜ்.

அதனை தொடர்ந்து விஜய், விஜய் சேதுபதி ஆகியோரை வைத்து அவர் இயக்கிய “மாஸ்டர்” திரைப்படமும் மாஸ் ஹிட் ஆக, அதன் பின் அவர் கமல்ஹாசன்னை வைத்து இயக்கிய “விக்ரம்” திரைப்ப்படம் இன்டஸ்ட்ரி ஹிட் அடித்தது.
மேலும் “விக்ரம்” திரைப்படத்தில் LCU என்ற புதிய விஷயத்தை அறிமுகப்ப்படுத்தினார் லோகேஷ் கனகராஜ். இந்த LCUவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆதலால் “லியோ” திரைப்படமும் LCUவுக்குள் வருமா? வராதா? என்ற ஆவலில் இருக்கின்றனர் ரசிகர்கள். இந்த நிலையில் “லியோ” திரைப்படத்தின் தயாரிப்பாளரான லலித்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “லியோ திரைப்படத்தில் 8 நிமிடங்கள் இடம்பெறும் இடைவேளை காட்சிகள் வேற லெவலில் இருக்கும், ரசிகர்கள் நிச்சயம் அந்த காட்சியை கொண்டாடுவார்கள்” என்று கூறியிருந்தார். இந்த செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.





