- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களை மிரட்டிய டிமாண்டி காலனி 2 படம்; எந்த ஓடிடி தளத்தில், எப்போ ரிலீஸ்...

ரசிகர்களை மிரட்டிய டிமாண்டி காலனி 2 படம்; எந்த ஓடிடி தளத்தில், எப்போ ரிலீஸ் ஆகப் போகுது தெரியுமா? – வந்தாச்சு லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

கடந்த 2015ம் ஆண்டில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான படம் டிமாண்டி காலனி. திரில், திகில் நிறைந்த இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களை மிரட்டியது. படமும் அமோக வெற்றியை பெற்றது. 4 இளைஞர்கள், ஒரு அறைக்குள் சிக்கிக்கொள்ள ஒவ்வொருவராக அவர்களை அமானுஷ்யம் கொல்வதுதான் கதை.

இந்த படத்தில் அருள்நிதி, சீனிவாசன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் இறுதியில் அவரும் இறந்துவிடுவது போல்தான், அந்த படத்தில் இயக்குனர் காட்டியிருந்தார். ஆனால் 9 ஆண்டுகளுக்கு பின் வெளியான டிமாண்டி காலனி 2ம் பாகத்தில், சீனிவாசன் கேரக்டரில் நடித்த அருள்நிதியை காப்பாற்றி விடுவது போல் காட்டி, அதே கதையை கண்டினியூ செய்து ஜெயித்திருக்கிறார் டைரக்டர் அஜய் ஞானமுத்து.

பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட அஜய் ஞானமுத்து படம் கோப்ரா. இதில் சியான் விக்ரம் 2 ரோல்களில் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்தது. ஆனால் அந்த தோல்வியை மறக்கடிக்கும் விதமான ஒரு சூப்பர் ஹிட் படமாக டிமாண்டி காலனி 2 அபாரமான வெற்றியை பெற்றுள்ளது.

இந்த படத்தில் அருள்நிதி கேரக்டரை அண்ணன், தம்பி என 2 ரோல்களாக மாற்றி, அதில் பெரிய வெற்றி பெற்றிருக்கிறார் அஜய் ஞானமுத்து. அதிலும் இந்த படத்தில் நாயகியாக நடித்துள்ள பிரியா பவானி சங்கர் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ராசியில்லாத நடிகை என்ற ஒரு அவப்பெயரையும் டிமாண்டி காலனி 2 படம் மூலம் அடித்து நொறுக்கி இருக்கிறார் பிரியா பவானி சங்கர்.

டிவி சேனல் ஒன்றில் செய்தியாளராக இருந்த பிரியா பவானி சங்கர், தமிழில் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. ரத்னம் படத்தில் அவர் நடித்த போது, ராசியில்லாத நடிகை என்று படத்தின் நாயகன் விஷால் கூறியதாக ஒரு தகவல் வைரலானது.

ஆனால் அதை தவிடுபொடியாக்கும் விதமாக டிமாண்டி காலனி 2 படம் பெரிய அளவில் வெற்றி பெற்று, இதுவரை 55 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியான இந்த படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் தகவல் தெரிய வந்துள்ளது. ஜி 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்த படம் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சற்று முன்