- Advertisement -
Homeபொழுதுபோக்கு10 ஆண்டுகளாக தொடரும் தோல்வி; கங்குவா படத்துக்கு கிடைத்த மிக மோசமான வரவேற்பு, நடிகர்...

10 ஆண்டுகளாக தொடரும் தோல்வி; கங்குவா படத்துக்கு கிடைத்த மிக மோசமான வரவேற்பு, நடிகர் சூர்யா எடுத்த அதிரடி முடிவு – இது கை கொடுக்குமா?

- Advertisement -

குதிரை பந்தயத்தில் எப்போதுமே வேகமாக ஓடி ஜெயிக்கிற குதிரைக்குதான் முக்கியத்துவம் கிடைக்கும். அதுபோல் தமிழ் சினிமாவிலும் ஜெயிக்கிற ஹீரோக்களுக்குதான் மதிப்பு, மரியாதை, அங்கீகாரம், முக்கியத்துவம் கிடைக்கும். அதனால் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமாருக்கான முக்கியத்துவம் குறையாமல், தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிகிறது.

ஆரம்பத்தில் சில படங்களில் நடிக்க தெரியாமல் தடுமாறினாலும், பிறகு தனக்கான ஒரு இடத்தை தனது திறமையால், உழைப்பால் தக்க வைத்துக்கொண்டவர் நடிகர் சூர்யா. மௌனம் பேசியதே, நந்தா, காக்க காக்க, கஜினி, உன்னை நினைத்து என தனக்கான வெற்றிப் பாதையை ஏற்படுத்திக் கொண்டவர்.

- Advertisement -

ஆனால் சிங்கம் 2 படத்துக்கு பிறகு 2014ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக தோல்வி படங்களாக தந்திருக்கிறார். காப்பான், அஞ்சான், பசங்க 2, சிங்கம் 3, 24, மாசு என்கிற மாசிலாமணி, எதற்கும் துணிந்தவன், தானா சேர்ந்த கூட்டம், கங்குவா வரை 10 படங்களுமே படுதோல்வி அடைந்தன.

இதில் கொரோனா காலகட்டத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம், சூரரைப் போற்று என 2 படங்கள் மட்டுமே சூர்யாவுக்கு வணிக ரீதியான வெற்றிப் படங்களான இருந்தன. சமீபத்தில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம், படுமோசமான விமர்சனங்களை சந்தித்து தோல்வி அடைந்ததால், சூர்யா 45 படப்பிடிப்பு தளத்தில் மூடு அவுட் ஆன நிலையில் சூர்யா காணப்படுகிறார்.

- Advertisement -

இதன் விளைவாக, நடிகர் சூர்யா தனது படங்களுக்கான கதைகளை தேர்வு செய்யவும், இயக்குனர்களிடம் கதை கேட்கவும், படத்தின் பட்ஜெட்டை தீர்மானிக்கவும் ஒரு ஆலோசகரை தனக்கான நியமனம் செய்துள்ளார். அவர் நடிகர் சல்மான்கானிடம் ஆலோசகராக பணிசெய்தவர். சல்மான்கான் தோல்வி படங்களை தந்த காலகட்டத்தில் அவருக்கு ஆலோசகராக இருந்து செயல்பட்டு, அவர் கம்பேக் கொடுக்க உதவியவர்.

இப்போது அந்த ஆலோசகர், நடிகர் சூர்யாவின் ஆலோசகராக டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளார். இனி அவர்தான் சூர்யா நடிக்கும் படங்களை தேர்வு செய்வார். கதை கேட்பார். அவர் முடிவு செய்யும் படங்களில், கதைகளில், கேரக்டர்களில் மட்டுமே சூர்யா நடிக்க உள்ளார். அரசியல் ஆலோசகர் போல, சினிமா ஆலோசகராக வந்துள்ள அவர், சூர்யாவை பழையபடி பெரிய வெற்றி நாயகனாக மாற்றுவாரா, என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்