- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது அவர் நடிக்க வேண்டிய படமாச்சே… நீங்க எப்படி நடிச்சீங்க? - துணை முதல்வர் உதயநிதி...

இது அவர் நடிக்க வேண்டிய படமாச்சே… நீங்க எப்படி நடிச்சீங்க? – துணை முதல்வர் உதயநிதி இப்படி கேட்டது யாரிடம் தெரியுமா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்த கொடி நடிகர் சூரி நடித்த கருடன் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் துரை செந்தில்குமார். தொடர்ந்து அவர் இப்போது லெஜண்ட் சரவணன் நடித்த ஒரு புதிய படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் நிறுவன உரிமையாளர் தொழிலதிபர் சரவணன் தி லெஜண்ட் என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து அவர் லெஜண்ட் என்றே அழைக்கப்படுகிறார். இவர் ஆரம்பத்தில் தனது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பர படங்களில் நடித்த நிலையில் இப்போது திரைப்பட நடிகராகவும் மாறிவிட்டார். தி லெஜண்ட் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது 2வது படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்ஸ் தற்போது கிடைத்துள்ளது.

- Advertisement -

இந்த புதிய படத்துக்கு லீடர் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இது அரசியல் சார்ந்த படம் அல்ல. நண்பர்களை பற்றிய கதைக்களத்தில் உருவாகி உள்ளது. இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம்தான் வெளீயீடு செய்கிறது. அதனால் இந்த படத்தை சமீபத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்த்திருக்கிறார்.

படம் பார்த்து அசந்து போன உதயநிதி ஸ்டாலின், இது விஜய் சார் நடிக்க வேண்டிய படமாச்சே? நீங்க எப்படி நடிச்சீங்க என்று ஆர்வமாக நடிகர் லெஜண்ட் சரவணனிடம் வெளிப்படையாக கேட்டிருக்கிறார். அந்த அளவுக்கு படத்தின் இயக்குனர் துரை செந்தில்குமார் இந்த படத்தை மாஸ் ஆக கொண்டு வந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

மேலும் இந்த படத்தை மிக விரைவில் முதல்வர் ஸ்டாலினும் பார்க்க உள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. கோடைகால விடுமுறையை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 3ம் தேதி லீடர் படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த படம் லெஜண்ட் சரவணனுக்கு பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று இப்போதே கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நடிகர் விஜய் நடிக்க வேண்டிய அளவுக்கு லீடர் படத்தில் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கிறார் என்றால் அந்த அளவுக்கு இந்த படம் சிறப்பாக வந்திருக்க வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் தொழிலதிபராக இருந்து சினிமாவுக்குள் வந்த லெஜண்ட் சரவணன் எதிர்காலத்தில் அரசியலுக்கும் வந்து விடுவாரா, வந்தாலும் வரலாம் யார் கண்டது என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்