- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது என்னோட வேலை அல்ல… இதற்காக பல படங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறேன் - இசையமைப்பாளர் தேவி...

அது என்னோட வேலை அல்ல… இதற்காக பல படங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறேன் – இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சொன்ன ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். டிஎஸ்பி என இசை ரசிகர்களால் சுருக்கமாக அழைக்கப்படுகிறார். இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடகராகவும் பாடல் ஆசிரியாகவும் இருக்கிறார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் நிறைய படங்களுக்கு டிஎஸ்பி இசையமைத்திருக்கிறார்.

தமிழில் தேவி குட்டி உனக்கும் எனக்கும் சச்சின் மாயாவி ஆறு சந்தோஷ் சுப்ரமணியம் கந்தசாமி வில்லு வேங்கை மன்மதன் அம்பு தசாவதாரம் என பல வெற்றிப் படங்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தவர். அதே போல் தெலுங்கில் பல ஹிட் படங்களுக்கு இசை தந்தவரும் தேவி ஸ்ரீ பிரசாத் தான். மாஸ் ஹிட் மூவி புஷ்பா படத்தின் இசையமைப்பாளரும் டிஎஸ்பி தான்.

- Advertisement -

தமிழ் மற்றும் தெலுங்கில் திரைப்படங்களுக்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத், பிலிம்பேர் விருது சந்தோஷம் விருது ஐடிஎப்ஏ விருது என பல விருதுகளை வென்றவர். இவரது தமிழ் தெலுங்கு இசை பாடல்கள், மற்ற மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கின்றன.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ரீ மிக்ஸ் பாடல்கள் அதிகரித்து வருகிறது. பழைய படங்களில் சூப்பர் ஹிட் ஆன பாடல்களை எடுத்து ரீ மிக்ஸ் செய்து அதை புதிய படங்களில் ஒலிக்க விடுகின்றனர். இது நல்ல பாடல்களை எல்லாம் ரீ மிக்ஸ் என்ற பெயரில் சிதைப்பதாகவே இசை ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

இதுபோன்ற ரீ மிக்ஸ் பாடல்களில் இசையை அதிகமாக ஒலிக்கவிட்டு பாடல் வரிகளை டம்மியாக்கி விடுகின்றனர். இதனால் அந்த பாடலின் தனித்தன்மையே மாறி விடுகிறது. அந்த பாடலின் வரிகள் தரும் ஜீவனே போய் வெறும் இசை மட்டுமே அதில் அதிகமாக ஒலிக்கிறது. இதுகுறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து இசையமைப்பாளர் டிஎஸ்பி கூறியதாவது, நான் என்னுடைய படங்களில் ரீ – மிக்ஸ் பாடல்கள் இருக்கக்கூடாது என்று ஒரு பாலிசி வைத்திருக்கிறேன். இந்த ரீ – மிக்ஸ் காரணங்களால் நான் பல படங்களை ரிஜெக்ட் செய்திருக்கிறேன். நான் இங்கே மியூசிக் பண்ணத்தான் இருக்கிறேன். மற்றபடி மத்தவங்க பாடல்களை ரீ கிரியேட் செய்வதற்காக இல்லை. அது என்னுடைய வேலை இல்லை என்று இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் வெளிப்படையாக கூறியிருக்கிறார்

- Advertisement -

சற்று முன்