- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 56வது படம், வித்யாசமான போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு...

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் 56வது படம், வித்யாசமான போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம் – ஆரம்பமே மிரட்டலா இருக்குதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குனர்களில் ஒருவராக மாரி செல்வராஜ் இருந்து வருகிறார். பரியேறும் பெருமாள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர் தொடர்ந்து கர்ணன் மாமன்னன் வாழை ஆகிய படங்களை டைரக்ட் செய்திருக்கிறார். அடுத்து அவரது இயக்கத்தில் உருவான பைசன் படம் வெளியாக உள்ளது.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பெரும்பாலும் சமூக உரிமைகள், ஜாதிய அடக்குமுறைகளை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகின்றன. இது ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தினாலும் அவரது படங்கள் ரசிக்கப்பட்டு வெற்றியடைகின்றன.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை 4 படங்களை மட்டுமே தமிழ் சினிமாவுக்கு அவர் தந்திருக்கிறார். கர்ணன் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் அவரது 56வது படத்தை மாரி செல்வராஜ் இயக்குவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கர்ணன் படத்துக்கு பிறகு மீண்டும் தனுஷ் படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார்.

ராயன் படத்துக்கு பிறகு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் தனுஷ் இயக்கத்தில் வெளியானது. அவரது இயக்கத்தில் உருவான மற்றொரு படம் இட்லிகடை வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையே சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த குபேரா என்ற படம் வருகிற ஜூன் 20ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் தனுஷ் தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராஜ்குமார் பெரியசாமி தமிழரசன் பச்சமுத்து விக்னேஷ் ராஜா ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஏற்கனவே நடிகர் தனுஷ் கமிட் ஆகியிருக்கிறார். இப்போது கர்ணன் படத்துக்கு பிறகு 4 ஆண்டுகள் ஆன நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் தனது 56வது படத்தில் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இந்த படத்தை மிக பிரமாண்டமாக பெரிய பொருட்செல்வில் தயாரிக்கிறார். வரலாற்று பின்னணி கொண்ட கதையில் இந்த படம் உருவாக உள்ளது. நேற்று இந்த படத்தில் போஸ்டர் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது. நீண்ட வாள் ஒன்றில், கைபிடியில் மண்டையோடு இருப்பது மிரட்டலாக உள்ளது. பெரிய பட்ஜெட்டில் வரலாற்று கதையாக இந்த படம் உருவாவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்