- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்... 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் ரத்தானது...

தனுஷ் ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்… 20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணம் ரத்தானது…

- Advertisement -

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். அவரிடம் இல்லாத திறமைகளே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு நடிப்பு இயக்கம் பாடலாசிரியர் தயாரிப்பு என சினிமாவில் பின்னி பெடலெடுத்து வருகிறார். ஆரம்பத்தில், அவரது தோற்றத்தைக் கண்டு அவரை கேலி செய்யாதவர்களே இருக்க முடியாது.

 

- Advertisement -

இருப்பினும் தனது நடிப்பின் மீது மட்டும் நம்பிக்கை வைத்துக்கொண்டு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருந்தார் தனுஷ். துள்ளுவதோ இளமை காதல் கொண்டேன் திருடா திருடி என அவருக்கு தொடர் வெற்றிகள் வந்து சேர்ந்தன. இது சமயத்தில்தான் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவுடன் தனுஷிற்கு காதல் ஏற்பட்டது.

 

- Advertisement -

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். தொடர்ந்து ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்தை தனுஷ் பெற்றாலும், அந்தத் பட்டத்தை தனது நடிப்பின் மூலம் ஓவர் டேக் செய்தார். குறிப்பாக வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த அத்தனை திரைப்படங்களும் வெற்றியை கொடுத்து தனுசை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

 

இதன் பிறகு தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வந்த தனுஷ், இயக்கத்தையும் மறுபக்கம் கையில் எடுத்தார். பவர் பாண்டி திரைப்படம் முதல் முறையாக அவரது இயக்கத்தில் வெளிவந்தது. இதனிடையே குடும்ப நிகழ்ச்சிகளிலும் தனுஷ் கவனம் செலுத்தி வந்தார். தனது மனைவியுடன் அவர் பாடல் பாடி ஆடும் வீடியோ இணையத்தில் வைரலானதை பலரும் மறக்க முடியாது.

 

இப்படியான சூழலில் தான் கடந்த 2022 ஆம் ஆண்டு திடீரென இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இது தனுஷ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 18 ஆண்டுகள் நண்பர்களாக இருந்தோம் என தங்கள் பிரிவிற்கான செய்தியில் அதனைக் குறிப்பிட்டு இருந்தனர்.

 

சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அவர்கள் விவாகரத்து கூறி மனு தாக்கல் செய்த நிலையில், அது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. இதில் மூன்று முறை இருவரும் ஆஜராகாத நிலையில், கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராகி விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கியது அதன்படி 2004 ஆம் ஆண்டு அவர்கள் செய்து கொண்ட திருமணம் ரத்து செய்யப்பட்டது.

 

- Advertisement -

சற்று முன்