- Advertisement -
Homeபொழுதுபோக்குஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்வாங்களே, அது இதுதானா? ராயன் படத்துக்கு வந்த புது சிக்கல்...

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாதுன்னு சொல்வாங்களே, அது இதுதானா? ராயன் படத்துக்கு வந்த புது சிக்கல் – அப்செட் ஆன டைரக்டர் தனுஷ்

- Advertisement -

தமிழ் சினிமாவில் குறிப்பிட்டுச் சொல்லும் முக்கிய 10 டாப் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். துவக்கத்தில் உருவக்கேலிக்கு ஆளான தனுஷ், இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க காரணம், அவரிடம் உள்ள திறமைகள்தான். யார் தன்னை விமர்சித்தாலும் அதை பொருட்படுத்தாமல் தனது கடும் உழைப்பால் ஸ்டார் நடிகராக வலம் வருகிறார்.

நல்ல நடிகராக மட்டுமின்றி பல படங்களில் பாடல்களும் பாடியிருக்கிறார் தனுஷ். சிறந்த நடனக் கலைஞராகவும் இருக்கிறார். சில படங்களையும் தயாரித்திருக்கும் தனுஷ், ராஜ்கிரண், ரேவதி நடிப்பில் ப பாண்டி என்ற படத்தை முதன்முதலாக டைரக்ட் செய்தார். அந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை, அசுரன் என பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ், தனது 50வது படம் ராயன் அவரே இயக்கி, அவரே நடித்தும் இருக்கிறார். இந்த படத்தில் அவரது அண்ணன் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா முரளி, காளிதாஸ் ஜெயராம், சரவணன் என பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அத்துடன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற காதல் கலந்த காமெடி படத்தை, தனது அக்கா மகனை ஹீரோவாக வைத்தும் தனுஷ் 3வது படமாக டைரக்ட் செய்து முடித்திருக்கிறார். அந்த படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்துவரும் நிலையில், அதுவும் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இதற்கிடையே தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ள தனுஷ், இந்த படப்பிடிப்பு ஒரு மாதத்தில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்து இளையராஜா வாழ்க்கை வரலாறு படத்தில், இளையராஜா கேரக்டரில் நடிக்க உள்ளார். இந்த படம் 2 பாகங்களாக வெளிவருகிறது. இந்த 2 பாகங்களிலும் இளையராஜாவாக நடிக்க ரூ. 100 கோடி சம்பளம் பெறுகிறார் தனுஷ்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் இயக்கத்தில் ராயன் படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள், நினைத்தபடி வராமல் போயுள்ளது. படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் பலத்த அதிருப்தியடைந்த நிலையில், சொதப்பலான காட்சிகளை ரி ஷூட் செய்யுமாறு தனுஷிடம் கூறியுள்ளது. இதனால் பல கமிட்மெண்டுகளில் உள்ள தனுஷ், பயங்கர அப்செட்டில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சற்று முன்