தனுஷ் தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருகிறார். இதில் பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளிவந்து சக்கை போடு போட்டது. முழுக்க முழுக்க ஒரு அனல் பறக்கும் ஆக்சன் திரைப்படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது.
“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் நடித்து முடித்த தனுஷ், திருப்பதிக்குச் சென்று மொட்டைப் போட்டார். அதன் பின் அவர் தற்போது “D 50” திரைப்படத்தில் நடித்து அதனை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தில் மொட்டை தனுஷாக நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரத்திற்குத்தான் தனுஷ் திருப்பதிக்குச் சென்று மொட்டை போட்டதாக தெரிய வருகிறது.

இந்த நிலையில் தற்போது தனுஷின் குடும்ப வாரிசு ஒருவர் சினிமாவில் களமிறங்கவுள்ளாராம். அதாவது தயாரிப்பாளர் அன்புச்செழியன் தனுஷிற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அட்வான்ஸ் கொடுத்தாராம். ஆனால் தனுஷோ அவருக்கு கால்ஷீட் தராமல் இழுத்தடித்துக்கொண்டே இருந்தாராம்.
சமீபத்தில் மீண்டும் தனுஷிடம் வந்து கால்ஷீட் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு தனுஷ் தன்னுடைய அக்கா மகனை அத்திரைப்படத்தில் நடிக்க வைக்கலாம் எனவும் அத்திரைப்படத்தை தானே இயக்குவதாகவும் கூறியிருக்கிறார். அதற்கு அன்புச்செழியனும் ஓகே சொல்லியிருக்கிறாராம். “D 50” திரைப்படத்திற்குப் பிறகு அன்புச்செழியன் தயாரிப்பில் தனுஷ் இயக்க அவரது அக்கா மகன் நடிக்கும் திரைப்படத்தின் பணிகள் தொடங்கப்பட உள்ளதாம். தனுஷிற்கு இரண்டு அக்காக்கள் இருக்கும் நிலையில் அதில் யாருடைய மகனை தனுஷ் களமிறக்கப்போகிறார் என்பது குறித்து தெரியவில்லை.





