- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடுத்தடுத்து இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்க, தனது 52 ஆவது படத்தை யாருக்கு தனுஷ் கொடுத்திருக்கிறார்...

அடுத்தடுத்து இயக்குனர்கள் வரிசை கட்டி நிற்க, தனது 52 ஆவது படத்தை யாருக்கு தனுஷ் கொடுத்திருக்கிறார் தெரியுமா?… நடிகரின் அதிரடி முடிவு…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் தனுஷ். கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு பிறகு, தனது ஐம்பதாவது திரைப்படத்தை அவரே இயக்கி நடித்தார். இந்த திரைப்படத்திற்கு காளிங்கராயன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதில் செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, சந்திப் கிஷன், அபர்ணா பால முரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். வடசென்னையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரபடுத்தப் பட்டிருக்கின்றன.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு பட இயக்குனர் சேகர் கமுலாவுடன் தனுஷ் இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கிடைத்த சிறு இடைவேளையில், இளைஞர்களை வைத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை அவர் இயக்கினார். இளம் நடிகர்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார்.

இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகளும், முடிவு பெற்றிருக்கின்றன. இப்படியான சூழ்நிலையில், சேகர் கமுலாவுடன் தனது 51வது திரைப்படத்தில், தனுஷ் நடித்து வருகிறார். இதில் நாகர்ஜூன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மும்பையில் உள்ள தாராவியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படியான சூழலில் தான் தனுஷின் அடுத்த திரைப்படத்தை யார் இயக்கப் போவது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அவர் ஏற்கனவே கேப்டன் மில்லர் படத்தை எடுத்த அருண் மாதேஸ்வரனுடன் மீண்டும் இணைய இருப்பதாக அறிவித்தார். இதே போல் இயக்குனர் மாரி செல்வராஜ் உடனும், தனுஷ் இணைய இருக்கிறார்.

இப்படியான சூழலில் தனுஷின் 52வது படத்தை, ஹெச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலுடன் அவர் இணைந்த திரைப்படத்தின் பணிகள் திடீரென பாதியில் நின்று போனது. இதைத் தொடர்ந்து விஜயின் கடைசி படத்தை வினோத் இயக்குவதாக கூறப்பட்டது. இப்படியான சூழலில் தற்போது தனுசுடனும் வினோத் இணைய இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் சூட்டிங் பணிகள் ஜூன் மாதம் தொடங்குவதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனுஷ் – வினோத் இணையும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சற்று முன்