நடிகர் தனுஷ், துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். காதல் கொண்டேன் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. தொடர்ந்து திருடா திருடி, சுள்ளான், தேவதையை கண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார்.
அவரது சினிமா கேரியரில் பொல்லாதவன் படம் அவருக்கு ஒரு ஹீரோ அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக தனுஷ் அசத்தினார். தொடர்ந்து ஆடுகளம், அசுரன், வேலையில்லா பட்டதாரி, நானே வருவேன் போன்ற படங்களால் டாப் ஸ்டார் வரிசையில் தனுஷூம் ஒருவராக மாறினார்.
ஏற்கனவே ராஜ்கிரண், ரேவதி ஜோடியை வைத்து ப. பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்த தனுஷ், இப்போது மீண்டும் டைரக்ஷனில் இறங்கி விட்டார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும், தனது 50வது படமாக ராயன் என்ற படத்தையும் டைரக்ட் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சேகர் கம்முலு என்ற தெலுங்கு பட இயக்குநர் இயக்கும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.
சேகர் கம்முலு இயக்கும் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனுஷ்க்கு ஜோடியாக நடிக்கிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நாகார்ஜூனா மிக முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். ஐதராபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடித்துக்கொண்டே, தனது 2 படங்களை டைரக்ட் செய்வதிலும் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார்.
தனுஷ் இயக்கும் ராயன் படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சரவணன், சந்தீப் கிஷன், காளிதாஸ், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் நடிக்கும் நடிகர்களின் புகைப்படங்களை பிளாக் அண்ட் ஒயிட்டில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களாக தனுஷ் வெளியிட்டு வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜிவி பிரகாஷ் படத்துக்கு இசையமைக்கிறார்.
இதற்கிடையே ஒரு புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனுஷ் தனது 50வது படத்தில், தனது டைரக்ஷனில் தனது மூத்த மகன் யாத்ராவை, நடிகராக அறிமுகப்படுத்த உள்ளார். தனது படத்தில் யாத்ராவுக்க ஒரு முக்கிய கேரக்டர் தர உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. ரஜினி, லதா ரஜினிகாந்த், ரஜினி மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யா, ரஜினியின் 2 மருமகன்கள், இப்போது பேரனும் சினிமா களத்தில் குதிப்பதால் குடும்பமே, தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கிறேதே என கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.





