தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். சில மாதங்களுக்கு முன் தனுஷ் நடித்த 50வது படம் ராயன் வெளியானது. இது தனுஷ் இயக்கத்தில் உருவான 2வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. தனுஷ் ஏற்கனவே ப பாண்டி என்ற படத்தை டைரக்ட் செய்திருந்தார் தனுஷ். நடிகராக மட்டுமின்றி பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகத் தன்மை கொண்டு விளங்குகிறார்.
இதுவரை தமிழ் சினிமாவில் 50படங்களில் தனுஷ் நடித்த நிலையில், பல வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகர் தனுஷ் தற்போது தனது 52வது படம் இட்லி கடை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அவரே டைரக்ட் செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக நடந்த முடிந்த நிலையில், இப்போது அடுத்தகட்ட சூட்டிங் பொள்ளாச்சி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் நடந்துள்ளது.
இட்லி கடை படத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல மலையாள நடிகை நித்யா மேனன் மீண்டும் தனுஷூடன் இணைந்து நடிக்கிறார். ஏற்கனவே இவர் திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் தனுஷூடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நித்யா மேனனுக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக வெளிநாட்டில் நடத்த படத்தின் இயக்குனர் தனுஷ் திட்டமிட்டுள்ளார். அதன்படி தாய்லாந்து, துபாய் அல்லது ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டில் இந்த படப்பிடிப்பு நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தாய்லாந்தில் அடிக்கடி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தாய்லாந்தில் எடுக்கப்பட்ட படங்கள் அதிகளவில் தொடர்ந்து வருவதால் இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தும். ஏனெனில் ரசிகர்களுக்கு பார்த்த இடங்களாக தான் பல படங்களில்உள்ளது.
துபாயிலும் அடிக்கடி தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன. அதனால் இந்த முறை இட்லி கடை படப்பிடிப்பை இயக்குனர் தனுஷ் ஜப்பானில் நடத்த அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பெயர் இட்லி கடை என்ற நிலையில் ஜப்பான் நாட்டில் அந்த படத்தின் படப்பிடிப்பு நடத்துவதா என்று ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியம் எழுந்துள்ளது.
ஆனால் இட்லி கடை படத்தின் கதைப்படி ஜப்பான் போன்ற வெளிநாடுகளில் தான் அந்த கதைக்களத்தில் தான் காட்சிகளை படம்பிடிக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது. எனினும் இன்னும் ஜப்பான் போவது குறித்து இயக்குனர் தனுஷ் உறுதியான முடிவு செய்யவில்லை என்றும், கடைசி நேரத்தில் இது தாய்லாந்து அல்லது துபாய் என மாறவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஜப்பான் சென்று படத்தை எடுத்தால் ரசிப்பதற்கு நிறைய காட்சிகள் படத்தில் இருக்கும் என்று ரசிகர் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





