- Advertisement -
Homeபொழுதுபோக்குவிரைவில் அஜீத்குமாரை சந்திக்கும் இயக்குனர் தனுஷ்… ஏகே 65 படத்தை உறுதி செய்வாரா? - முக்கிய...

விரைவில் அஜீத்குமாரை சந்திக்கும் இயக்குனர் தனுஷ்… ஏகே 65 படத்தை உறுதி செய்வாரா? – முக்கிய முடிவை ஏகே விடம் தள்ளிவிடும் தனுஷ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகராக பாடகராக தயாரிப்பாளராக இருந்த தனுஷ், இப்போது டைரக்டராகவும் இருந்து வருகிறார். ப பாண்டி ராயன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என இதுவரை 3 படங்கள் அவரது இயக்கத்தில் வெளியான நிலையில், இட்லி கடை என்ற 4வது படம் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இதற்கிடையே நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் குபேரா படம் வெளியானது. தெலுங்கில் பெரிய வரவேற்பை பெற்ற இந்த படம் தமிழில் போதிய வரவேற்பை பெறவில்லை. பான் இந்தியா படமாக உலகளவில் மொத்தமாக ரூ. 85 கோடிக்கு மேல் வசூலித்துள்ள குபேரா படம், தமிழ் நாட்டில் கடந்த 5 நாட்களில் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து படம் பிளாப் ஆகியிருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த பல மாதங்களாகவே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படத்தை இயக்கும் முயற்சியில் இயக்குனர் தனுஷ் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். குட் பேட் அக்லி படத்துக்கு பிறகு ஏகே 64 படத்தை இயக்க தனுஷை தான் அஜீத்குமார் தேர்வு செய்வார் என எதிர்பார்த்த நிலையில், குட் பேட் அக்லி மாஸ் ஹிட் ஆனதால் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அந்த வாய்ப்பை அஜீத்குமார் வழங்கி விட்டார்.

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமாரிடம் நேரில் கதை சொல்ல இயக்குனர் தனுஷ் தொடர்ந்து முயற்சித்து வருகிறார். அஜீத்குமார் கடந்த 6 மாதமாக வெளிநாடுகளில் நடந்து வரும் கார் ரேஸில் பிஸியாக இருந்த வருகிறார். அஜீத்குமார் கார் ரேஸிங் என்ற அணியின் தலைவராகவும் அவர் இருப்பதால் அவரை பிடிப்பதே பெரிய விஷயமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் வருகிற ஜூலை 15ம் தேதிக்கு பிறகு நடிகர் அஜீத்குமாரை சந்திக்க வாய்ப்பிருந்தால், துபாய்க்கு நேரில் வருமாறு நடிகர் தனுஷூக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட நாளில் நடிகர் அஜீத்குமாரை தனுஷ் சந்தித்து முழு கதையை சொல்ல இருக்கிறார். அந்த படம் அஜீத்குமாரின் 65வது படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத்குமார் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தால், இயக்குனராக மட்டுமே இருக்கவும் தனுஷ் முடிவு செய்திருக்கிறார். அஜீத்குமாருடன் சில காட்சிகளில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஏற்கனவே தனுஷ் கூறியிருக்கிறார். மேலும் அஜீத்குமார் நடிக்கும் படத்தை அவர் விரும்புகிற தயாரிப்பு நிறுவனமே தயாரிக்கட்டும். இதில் அவரே முடிவு செய்துக் கொள்ளட்டும் என்ற ஒரு திட்டத்திலும் தனுஷ் இருந்து வருகிறார்.

- Advertisement -

சற்று முன்