- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி திரிஷா நயன்தாரா பூஜா ஹெக்டே இவர்களில் யாரும் இல்லை…...

அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தின் கதாநாயகி திரிஷா நயன்தாரா பூஜா ஹெக்டே இவர்களில் யாரும் இல்லை… அந்த நடிகையா? – சுடச்சுட வெளியான அப்டேட்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் விடாமுயற்சி குட் பேட் அக்லி என 2 படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதில் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியான விடாமுயற்சி படத்தில் திரிஷா நாயகியாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. பிரேக் டவுன் என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படம் ஏகே ரசிகர்களுக்கு திருப்தியை தரவில்லை.

தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் குட்பேட் அக்லி. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான இந்த படத்திலும் திரிஷா தான் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அஜீத்குமார் ரசிகர்களை திருப்திபடுத்தும் நோக்கத்தில் பேன் ஃபாய் படமாக வெளியான இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் இப்போது கார் ரேஸில் பிஸியாக இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் துவங்கிய கார் ரேஸ் வருகிற அக்டோபர் மாதம் வரை நடக்கிறது. இப்போது 5 மாதங்கள் கடந்த நிலையில், இன்னும் 5 மாதங்களுக்கு இந்த கார் ரேஸ் தொடர்ந்து நடக்கிறது. துபாய் இத்தாலி பிரிட்டன் நெதர்லாந்து என தொடர்ந்து பல நாடுகளில் இந்த கார் ரேஸ் தொடர்ந்து நடக்கிறது.

இதற்கிடையே நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அவரது அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதில் பல சந்தேகங்கள் இருந்தன. சிறுத்தை சிவா விஷ்ணுவர்தன் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் தனுஷ் என பலரது பெயர்கள் அடிபட்ட நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே அஜீத்குமார் வாய்ப்பை தந்திருக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் இந்த படத்தை தயாரிக்கிறது.

- Advertisement -

வருகிற நவம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி அடுத்த பிப்ரவரியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு 2026ம் ஆண்டு மார்ச் முதல் மீண்டும் கார் ரேஸ்சில் கலந்துக்கொள்ள அஜீத்குமார் திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நடிக்கப் போவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

குறிப்பாக திரிஷா நயன்தாரா பூஜா ஹெக்டே போன்றவர்களின் பெயர்கள் முதலில் அடிபட்ட நிலையில் இப்போது நடிகை ஸ்ரீநிதி ஷெட்டிதான் இந்த படத்தில் நாயகி என்பது உறுதியாகி உள்ளது. இவர் ஏற்கனவே கேஜிஎப் ஸ்ட்ரீட் 3 ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர் என்பதால், அவரை நாயகியாக நடிக்க வைக்க ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ரொமான்ஸ் ஆக்சன் காட்சிகளில் நல்ல நடிகையாக ஸ்ரீநிதி ஷெட்டி மெர்ச்சூரிட்டியான ஒரு நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்