தனுஷ் நடிப்பில் அண்மையில் குபேரா திரைப்படம் வெளியானது. சேகர் கமுலா இதனை இயக்கியிருந்தார். ஏற்கனவே தனுஷ், சார் திரைப்படம் மூலம் தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இரண்டாவது திரைப்படமாக இது வெளியாகியிருந்தது. பான் இந்தியா படம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், முழுக்க முழுக்க இது தெலுங்கு படமாகவே கருதி படக்குழு எடுத்தது.
நாகர்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழில் இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு கைகூடவில்லை. ஒரு டப்பிங் படமாகவே இது இங்கு பார்க்கப் பட்டதால் தனுஷ் ரசிகர்களே இதன் மீது கவனம் செலுத்தவில்லை. இதனால் குபேரா தமிழில் தோல்வி அடைந்தது.
அதேசமயம் தெலுங்கு சினிமாவில் குபேரா திரைப்படம் லாபத்தை கொடுத்திருக்கிறது. இப்படியான சூழலில் தனுஷ் அடுத்ததாக, பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. இதில் விமானப்படை அதிகாரியாக சங்கர் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் தனுஷ்.
இப்படி பிசியாக இருக்கும் தனுஷ், தனது இட்லி கடை திரைப்படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் ஏற்கனவே நிறைவு பெற்றிருக்கும் சூழலில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் 1ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அதற்கான வேலைகள் தொடர்கின்றன.
அதேசமயம் தனுஷ் நடிப்பில் அடுத்த அடுத்த படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன. அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, போர் தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா, வெற்றிமாறன், மாரி செல்வராஜ் ஆகியோர் படங்களில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதில் அவர் அடுத்ததாக இணைய போவது போர் தொழில் பட இயக்குனருடன்தான்.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. பீரியட் கால கதையாக இதனை எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறார் விக்னேஷ் ராஜா. அதற்கான பணிகள் வேகம் எடுத்துள்ளன. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பீரியட் கதைக்கு தனுஷ் செட்டாவாரா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.





