- Advertisement -
Homeபொழுதுபோக்குரசிகர்களை ஏமாற்றிய கேப்டன் மில்லர் படக்குழு, கடைசியில் நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்டும் டும்ன்னு பாடீட்டே...

ரசிகர்களை ஏமாற்றிய கேப்டன் மில்லர் படக்குழு, கடைசியில் நீலச்சாயம் வெளுத்துப் போச்சு டும்டும் டும்ன்னு பாடீட்டே வந்துட்டாங்க!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் கேப்டன் மில்லர். முதலில் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றதாக கூறப்பட்டாலும், 2வது, 3வது நாளிலேயே பல தியேட்டர்களில் விரல்விட்டு எண்ணும் அளவுக்குதான் ரசிகர் எண்ணிக்கை இருந்திருக்கிறது.

இதுவரை வெளியான தனுஷ் படங்களில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கேப்டன் மில்லர்தான். இதன் மொத்த பட்ஜெட் மட்டும் 110 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. படத்தின் மேக்கிங் நன்றாக இருந்தாலும், கதை, திரைக்கதை என்று எதுவுமே இல்லை என்பதுதான் ரசிகர்களின் ஏமாற்றத்துக்கு காரணம்.

- Advertisement -

அதாவது தனுஷ் ரசிகர்களை திருப்திபடுத்துவதை விட்டுவிட்டு பொதுவான நல்ல சினிமாவை வரவேற்று ரசிக்கும் ரசிகர்களுக்காக தனுஷ் இனி நடிக்க வேண்டும். குறிப்பாக குடும்பத்துடன் படம் பார்க்க வர விரும்பும் வகையில் படத்தில் தனுஷ் நடிக்க வேண்டும் என்பது பலரது கருத்தாக உள்ளது.

இந்த படத்தை பொருத்தவரை படம் முழுக்க வன்முறை, துப்பாக்கி சத்தம்தான். மற்றபடி ரசிகர்கள் விரும்பும் படியான விஷயங்கள் எதுவுமே இல்லை. முதலில் ஏ சான்றிதழ் தந்து, பின் க்ளைமாக்சில் பல காட்சிகள் குறைக்கப்பட்ட பின்பே, யுஏ சான்று தரப்பட்டுள்ளது. அதுவே இப்படி என்றால், அதுவும் சென்சார் கட் செய்யாமல் இருந்திருந்தால், ரசிகர்களின் நிலை இன்னும் அலங்கோலம்தான்.

- Advertisement -

இப்போது லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது கன்னட நடிகர் சிவராஜ்குமார் இந்த படத்தில் நடித்துள்ளார். கேமியோ ரோல் போல, சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருக்கிறார். அவர் நடித்திருப்பதை காட்டி, கன்னட தயாரிப்பாளரிடம் இந்த படத்தை 3.5 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளனர்.

ஆனால் தனுஷ் படத்துக்கு, கன்னட திரையுலகில் 1.5 கோடி ரூபாய்தான் வழக்கமான வியாபாரமாம். இந்நிலையில், படத்தை பார்த்த ரசிகர்கள், சில காட்சிகளில் ஏனோதானோ என வந்து செல்லும் தங்களது ஸ்டார் நடிகர் சிவராஜ்குமாரை பார்த்து, நொந்து ஏமாந்து போயுள்ளனர். இதையடுத்து அந்த கன்னட தயாரிப்பாளர், இதில் சிவராஜ்குமார் நடித்த மாதிரியே இல்லை. அதனால், வழக்கம்போல ரூ.1.5 கோடிதான் தர முடியும் என்று கூறி, ரூ. 2 கோடியை தர மறுத்துவிட்டார். இப்படி நம்ம சாயம் வெளுத்துப் போச்சே என, படக்குழு அப்செட் ஆகியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்