தமிழ் சினிமாவில் காக்க காக்க விண்ணைத்தாண்டி வருவாயா வேட்டையாடு விளையாடு வாரணம் ஆயிரம் வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கௌதம் மேனன். திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி பல படங்களில் கௌதம மேனன் நடித்தும் இருக்கிறார்.
அவரது இயல்பான நடிப்பும் உடல்மொழியும் கணீர் குரலில் அழுத்தமான வசன உச்சரிப்பும் அவரை ஒரு நல்ல நடிகராகவும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள வைத்தது. திரைப்பட இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர் கௌதம மேனன் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திலும் கௌதம மேனன் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி அவரே சொந்தமாக தயாரித்த படம் துருவ நட்சத்திரம். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யா தான் நடித்தார். கடந்த 2010ம் ஆண்டில் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் அந்த படத்தின் கதையில் உடன்பாடு இல்லாத காரணத்தால் துருவ நட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா நடிக்காமல் விலகி விட்டார்.
அதன்பிறகு இந்த படத்தின் கதையை கேட்ட விக்ரம் துருவநட்சத்திரம் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன்பிறகு 2017ம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆனால் தொடர்ந்து நிதி பிரச்சனை கடன் பிரச்சனை உள்ளிட்ட சிக்கல்களின் காரணமாக துருவ நட்சத்திரம் படத்தின் படப்பிடிப்பு அடிக்கடி தடைப்பட்டது. மாதக்கணக்கில் ஷூட்டிங் நின்று நின்று மீண்டும் மீண்டும் நடந்தது. இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் கடந்து ஒரு வழியாக படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது.
ஆனால் துருவ நட்சத்திரம் படம் ரிலீஸாவது பல ஆண்டுகளாக தள்ளிக் கொண்டே போனது. பலமுறை துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டாலும் அந்த தேதியில் திரைப்படத்தை படக்குழுவால் வெளியிட முடியவில்லை. இதற்கு அந்த படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனன் பலவிதமான நிதி நெருக்கடிகளிலும் கடன் பிரச்சினைகளிலும் சிக்கியது தான் காரணம் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் வெளியீட்டுக்கான அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து விட்டதாகவும் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வரும் பிப்ரவரி மாதம் 2வது வாரத்தில் வெளியாகும். விரைவில் படம் திரைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மதகஜ ராஜா படம் போல துருவ நட்சத்திரம் படமும் பல ஆண்டுகள் கழித்து வந்தாலும் கௌதம் மேனன் மற்றும் விக்ரமுக்கு சூப்பர் கம்பேக் கொடுக்கும் ஒரு படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.





