- Advertisement -
Homeபொழுதுபோக்குநம்ம தலைவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரே, அவருமா அப்படி எல்லாம் நடந்துக்கறாரு? - தலை...

நம்ம தலைவர் அப்படி எல்லாம் செய்ய மாட்டாரே, அவருமா அப்படி எல்லாம் நடந்துக்கறாரு? – தலை சுத்திப் போன டைரக்டர் என்ன ஆனாருன்னு பாருங்க!

- Advertisement -

தமிழ் சினிமாவில், இயக்குநர்கள்தான் ஒரு படத்தை உருவாக்குபவர்கள். ஒரு படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை அவர்கள் விரும்பியபடி, அவர்கள் எழுதிய கதைப்படி அந்த படம் வர வேண்டும். அதற்கு, அந்த படத்தில் நடிக்கும் அத்தனை கேரக்டர்களும் உயிர்கொடுக்க வேண்டும். இசை, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, சண்டைக்காட்சிகள் உள்ளிட்ட அனைத்தும் அந்த கதையோட்டத்துக்கு உதவ வேண்டும்.

இதை எல்லாம் விட அந்த படம் உருவாவதற்கான அனைத்து செலவுகளை ஏற்று, அந்த படம் ஒரு படைப்பாக வெளிவர காரணமாக இருப்பது தயாரிப்பாளர்தான். படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர் நடிகையர் மீது அபார நம்பிக்கை வைத்து, பல கோடி ரூபாய்களை அதில் தயாரிப்பாளர்தான் முதலீடு செய்கிறார். அந்த படம் வெற்றியடைந்தால் மட்டுமே தயாரிப்பாளர் அடுத்த படங்களை எடுக்க முடியும். இல்லாவிட்டால், ஒரே படத்தில் கடனாளியாகி விடுவர்.

எம்ஜிஆர், கமல் போன்றவர்களுக்கு திரைத்துறையில் அனைத்து விஷயங்களும் அத்துப்படி. அனைத்து தொழில்நுட்பங்களும் அவர்களுக்கு தெரியும். குறிப்பாக எம்ஜிஆர், ரசிகர்களின் நாடிபிடித்து பார்த்தவர். தனது படம் இப்படி இருந்தால் ரசிகன் கொண்டாடுவான் என தெரிந்து வைத்திருந்ததால், அத்தகைய படங்களை தந்து, ரசிகர்களை தன்வசப்படுத்தினார். அதே வேளையில் ரசிகர்களை மகிழ்விக்கவும் அவர் தவறியது இல்லை.

பொதுவாக பெரிய நடிகர், சின்ன நடிகர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருமே, படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அந்த கதைப்படி, அவர் கூறும் காட்சிகளில் நடிக்க வேண்டும். அப்போதுதான் இயக்குநர் அவர் நினைத்தபடி படத்தை உருவாக்க முடியும். பாரதிராஜா, பாக்யராஜ் இயக்கிய படங்களில் நடித்த போது, சிவாஜி கணேசன் கேமரா முன் நடித்துவிட்டு, கதையை கூட சொல்லாமல் இப்படி என்னை நடிக்க வைக்கிறார்களே, என அருகில் இருந்தவர்களிடம் புலம்பி இருக்கிறார்.

ஆனால், இப்போதைய நடிகர்களில் விஜய், அஜீத் போன்றவர்கள் இயக்குநர்கள் சொல்கிற கதையில் படத்தில் நடிப்பதில்லை. அவர்கள் சொல்கிற படிதான் இயக்குநர் படம் எடுக்க வேண்டும். அவர்கள் சொல்கிறபடி காட்சிகளில் மாற்றம் செய்ய வேண்டும், வசனங்களை எழுத வேண்டும். ஆரம்பத்தில், இயக்குநர் சொன்னபடி நடித்தவர்கள், இப்போது வளர்ந்த பின் அவர்கள் சொல்கிறபடி இயக்குநர்கள் படம் எடுக்கின்றனர்.

இதுவரை இப்படி ஒரு குற்றச்சாட்டு இல்லாமல் இருந்தவர் ரஜினிகாந்த், இப்போது அவர் நடித்துவரும் ரஜினி 170 படப்பிடிப்பு தளத்தில், இயக்குநர் தசெ ஞானவேலிடம், இப்படி கதையை மாத்துங்க, காட்சியை மாத்துங்க, இந்த விஷயங்களை சேர்த்துங்க என, ரஜினியின் தலையீடு அதிகமாக இருக்கிறதாம். இப்படித்தான் லியோ படத்தின் கதையை விஜயும், தயாரிப்பாளர் லலித்குமாரும் லோகேஷ் கனகராஜிடம் சொல்லி, சொல்லியே மாத்துனாங்களாம் என்பது நினைவூட்டும் கொசுறு தகவல்.

சற்று முன்