- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யோட இந்த திரைப்படத்தை நான்தான் இயக்குவதாக இருந்தது... இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த பார்த்திபன்...

விஜய்யோட இந்த திரைப்படத்தை நான்தான் இயக்குவதாக இருந்தது… இதுவரை யாருக்கும் தெரியாத விஷயத்தை போட்டுடைத்த பார்த்திபன்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பல்வேறு பரிணாமங்களில் தன் திறமையை அடையாளப்படுத்திக் கொண்டவர் பார்த்திபன். இவர் முதலில் இயக்குனராகத்தான் அறிமுகமானார். புதிய பாதை என்னும் திரைப்படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக களம் இறங்கினார் பார்த்திபன்.

 

- Advertisement -

இந்த திரைப்படத்திற்குப் பிறகு அவர் நடிப்பிலேயே ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் அவரது நடிப்பில் பிரம்மாண்ட வெற்றி என எந்த திரைப்படங்களும் அமையவில்லை. இருப்பினும், தனது நடிப்பில் எந்த குறையும் வைக்காமல் நடித்து வந்த பார்த்திபனுக்கு ஓரளவு வெற்றி கிடைக்க அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டிருந்தார்.

 

- Advertisement -

அவ்வப்போது இயக்கத்தின் மீதும் அவர் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் பார்த்திபன் இயக்கிய பெரும்பாலான திரைப்படங்கள் படுதோல்வியை சந்தித்தன. இவன், குடைக்குள் மழை, பச்ச குதிரை, வித்தகன் என அவர் இயக்கிய படங்கள் வந்த இடம் தெரியாமல் மறைந்து போயின. இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கத்தில் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்னும் பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது.

 

வித்தியாசமான கதைக்களத்தில், சினிமாவுக்குள் சினிமாவாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஓரளவு வரவேற்பு பெற்றது. பார்த்திபன் பலராலும் பாராட்டப்பட்டார். இதன்பிறகு அவர் பாக்கியராஜ் மகன் சாந்துருவை வைத்து எடுத்த கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஒத்த செருப்பு படத்தை இயக்கி ஒட்டுமொத்த திரையுலகையும் கவனிக்க வைத்தார் பார்த்திபன்.

 

ஒரே ஒரு ஆள் மட்டும் தான் படத்தில் இருந்தாலும் அதை எந்தவிதமான சலிப்பையும் வரவழைக்காமல், சுவாரஸ்யமாக எடுத்து ரசிகர்களை அசர வைத்தார். நிச்சயம் இந்த ஒத்த செருப்பு அங்கீகரிக்கப்பட வேண்டியது தான் என்று பலரும் கூறினர். படமும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரவின் நிழல் திரைப்படத்தை தொடர்ந்து அவர் டீன்ஸ் என்னும் படத்தை எடுத்திருக்கிறார். சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாகிறது.

 

இந்த நிலையில் அவர் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டியில் கூறியிருப்பதாவது, விஜய் சாரிடம் நான் ஒரு கதையை கூறினேன். ஆனால் அது சரியாக கிளிக் ஆகவில்லை. ஹிந்தியில் வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தை, ரீமேக் செய்ய விஜய் என்னிடம் கூறினார். ஆனால் வேறு ஒருவர் சங்கர் பெயரை பரிந்துரைத்ததால், அவரிடம் அந்தத் திட்டம் சென்றது. கடைசியில் பெரிய பெரிய பெயர்கள் திட்டத்திற்குள் சென்றார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனிடையே நண்பன் திரைப்படத்தை முதலில், பார்த்திபன் இயக்க இருந்ததை அறிந்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்