- Advertisement -
Homeபொழுதுபோக்குவிளம்பரங்களில் மட்டுமே நடிகர் மாதவனை பார்த்து பார்த்து சலித்துப் போன தமிழ் சினிமா ரசிகர்கள் -...

விளம்பரங்களில் மட்டுமே நடிகர் மாதவனை பார்த்து பார்த்து சலித்துப் போன தமிழ் சினிமா ரசிகர்கள் – விஞ்ஞானி ஒருவரோட பயோபிக்ல நடிக்கிறாராமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று டீன் ஏஜ் பெண்களால் வர்ணிக்கப்பட்ட நடிகர் மாதவன். அலைபாயுதே, மின்னலே, ஜேஜே, இறுதிச்சுற்று, விக்ரம் வேதா, டும் டும் டும், ரன், அன்பே சிவம், யாவரும் நலம், தம்பி, ஆரியா, நள தமயந்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனம் கவர்ந்தவர். நடிகர் கமல்ஹாசனின் அன்பே சிவம் படத்தில் மாதவன் கேரக்டர் அதிக கவனம் பெற்றது.

நடிகர்களை பொருத்த வரை தொடர்ந்து பீல்டில் இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த படங்களில் நடித்தால் மட்டுமே ரசிகர்களின் கவனத்தில் இருக்க முடியும். ஆனால் மாதவன் போன்ற சில நடிகர்கள், விருப்பபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பதால் சில படங்களில் மட்டுமே அவர்களை காண முடிகிறது. என்றாலும், கமல்ஹாசன் தொடர்ந்து தன் படங்களில் நடிக்க வாய்ப்பு தரும் முக்கிய நடிகராக மாதவன் இருந்து வருகிறார்.

- Advertisement -

துவக்கத்தில் காதல் படங்களிலும் அதன் பிறகு ஆக்சன் படங்களிலும் அசத்திய மாதவன், சமீப காலமாக படங்களில் நடிப்பதை எதுவாக குறைத்துக் கொண்டார். அவர் இயக்கிய ராக்கெட்டரி படம் பெரிய அளவில் வரவேற்பு பெற்று விருதுகளையும் அள்ளியது. மாதவன், கடந்த பல ஆண்டுகளாக கேரக்டர்களை தேர்வு செய்து சொற்பமான படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

ஆனால், நடிகர் மாதவன் அதிக அளவில் விளம்பர படங்களில் நடித்து வருகிறார். டிவி சேனல்களில் எப்போதுமே அவரது விளம்பரங்களை மக்கள் அதிக அளவில் பார்த்து வருகின்றனர். படங்களில் நடிப்பது அதனால் வெகுவாக குறைந்து போய்விட்டது. மன்மதன் அம்பு, பிரியமான தோழி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் மாதவன், அடுத்ததாக ஜிடி நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது. விஞ்ஞானிகளில் இன்றும் புகழப்படும் ஒரு சிறந்த மனிதராக ஜிடி நாயுடு இருக்கிறார். ஏற்கனவே அவர் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிப்பார் என்று தகவல் வெளியான நிலையில், இப்போது தான் அதற்கான ஆயத்த பணிகளை மாதவன் துவங்கியிருக்கிறார்.

இந்த படம் ஐந்து மொழிகளில் பான் இந்தியா படமாக உருவாகிறது. சமீப காலமாக முக்கிய தலைவர்கள், பிரபல மனிதர்கள், பெரிய விஞ்ஞானிகள் போன்றவர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கோவையைச் சேர்ந்த விஞ்ஞானி ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு படத்தில் மாதவன் நடிப்பது ரசிகர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இப்போது அந்த படத்துக்கான ப்ரீ புரடக்சன் பணிகளை மாதவன் துவங்கி இருப்பதாக தெரிகிறது.

- Advertisement -

சற்று முன்