- Advertisement -
Homeபொழுதுபோக்குகோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் கேப்டன் விஜயகாந்த் உடல்; நாளை படப்பிடிப்பு...

கோயம்பேடு தேமுதிக கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் கேப்டன் விஜயகாந்த் உடல்; நாளை படப்பிடிப்பு ரத்து – தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

- Advertisement -

தேமுதிக தலைவர் நடிகர் கேப்டன் விஜயகாந்த், இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். இரு தினங்களுக்கு முன் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்றபட்ட நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்,

தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. தொடர்ந்து டாக்டர்கள் முயற்சித்தும் விஜயகாந்த் உயிரிழந்தார்.

- Advertisement -

இதையடுத்து மருத்துவமனையில் இருந்து அவரது உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள், தமிழ் சினிமா துறையினர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சாலிகிராமம் இல்லத்தில் இருந்து விஜயகாந்த் உடல், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்ட விஜயகாந்த் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, பிரமேலதா அருகில் அமர்ந்த நிலையில், புறப்பட்டுச் சென்றது. ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் பின்தொடர ஆம்புலன்ஸ் வாகனம் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது.

- Advertisement -

இந்நிலையில் தொடர்ந்து சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் தங்களது இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சினிமாவில், அரசியலில் டூப் போட தெரியாதவர் விஜயகாந்த், எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பாடலுக்கு உயிர் கொடுத்தவர், உயிர் இன்று அடங்கிவிட்டது எனக் கூறியுள்ளார்.

விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை ஒருநாள் தமிழ்நாடு முழுவதும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக, தமிழ்நாடு திரைப்பட உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை திரைப்படங்களின் படப்பிடிப்பு எதுவும் நடக்காது என தெரிவித்துள்ளது. தொடர்ந்து விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்சியினர், ரசிகர்கள், சினிமா நடிகர், நடிகையர் தேமுதிக தலைமை கட்சி அலுவலகத்துக்கு செல்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்