- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படம் போல நிச்சயமாக இது இருக்காது… ஏகே 64 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட்...

அந்த படம் போல நிச்சயமாக இது இருக்காது… ஏகே 64 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி. இதில் விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அகலி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ரூ. 230 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. குறிப்பாக அஜீத்குமார் ரசிகர்களை குறிவைத்து அவர்களை உற்சாகப்படுத்தும் ஒரு ஃபேன்பாய் படமாக இது இருந்தது.

குட் பேட் அக்லி படத்தில் வரலாறு தீனா பில்லா அமர்க்களம் வாலி ஆகிய படங்களின் ரெபஃரென்ஸ் காட்சிகளை கொண்டு படம் முழுவதும் பல காட்சிகளும் பாடல்களும் இருந்தன. இதனால் படம் பார்த்த அஜீத்குமார் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர். ஆனால் பொதுவான ரசிகர்களை இந்த படம் திருப்தி செய்யவில்லை.

- Advertisement -

மேலும் இந்த படம் மொத்தம் ரூ. 230 கோடி வரை வசூலை அள்ளினாலும் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களிலும் குறிப்பாக ஆந்திரா கர்நாடகா கேரளம் போன்ற மாநிலங்களில் இந்த படம் பெரிய வசூலை குவிக்கவில்லை. அதே போல் ஓவர்சீஸ் வசூலிலும் இந்த படம் பின்தங்கியதால் படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 70 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை நடிகர் அஜீத்குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கே தந்து விட்டார். ஏகே 64 படத்தின் ஷூட்டிங் வருகிற நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஏனெனில் கடந்த ஜனவரி முதல் 9 மாதங்களாக வெளிநாட்டில் கார் பந்தயங்களில் ஈடுபட்ட நடிகர் அஜீத்குமார் இந்த மாத இறுதியில்தான் தமிழ்நாடு திரும்ப உள்ளார்.

- Advertisement -

இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருக்கிறார். படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இந்த படத்தின் அஜீத்குமார் சம்பளமாக ரூ. 186 கோடி கேட்ட நிலையில் பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் ஏகே 64 படத்தை தயாரிக்காமல் பின்வாங்கி விட்டன. இந்த சூழலில் ராகுல் இந்த படத்தை தயாரிக்க முன்வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, குட் பேட் அக்லி படம் முழுக்க முழுக்க அஜீத்குமார் ரசிகர்களுக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. ஆனால் ஏகே 64 படம் அப்படி இருக்காது. இது அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் சிறந்த பொழுதுபோக்கு ஆக்சன் படமாக இருக்கும் என்று இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஜான்வி கபூர் நடிக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்