கடந்த 2022 ஆம் ஆண்டு விக்ரம், இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “கோப்ரா”. இத்திரைப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்க ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை.

இத்திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவானது. ஆனால் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் 58 கோடிகளே வசூல் ஆனது. விக்ரம் கெரியரில் மிகப் பெரிய தோல்வி திரைப்படமாக இது அமைந்தது.
“கோப்ரா” திரைப்படத்தின் திரைக்கதை ஒரு மிகப் பெரிய சொதப்பலாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருந்தது. ஆனால் அது இப்படத்தின் வெற்றிக்கு கொஞ்சம் கூட வழி வகுக்கவில்லை. அந்தளவுக்கு இத்திரைப்படத்தின் கதையும் திரைக்கதை மிகவும் பலவீனமாக இருந்தது.\

“கோப்ரா” திரைப்படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து தற்போது “டிமாண்டி காலனி 2’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான டிமாண்டி காலனி திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது. அந்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
“டிமாண்டி காலனி 2” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் Post Production பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூத்த பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு பிஸ்மி இயக்குனர் அஜய் ஞானமுத்து குறித்தான ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதாவது “கோப்ரா” திரைப்படம் மிகப் பெரிய தோல்வியை தழுவியதால் இயக்குனர் அஜய் ஞானமுத்து “டிமாண்டி காலனி 2” திரைப்படத்தை வெற்றித் திரைப்படமாக உருவாக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறாராம். ஆதலால் நண்பர்கள் வெளியே ஹோட்டலுக்கு சாப்பிட கூப்பிட்டால் கூட வரமாட்டேன் என்கிறாராம். முழுக்க முழுக்க எடிட்டிங், டப்பிங் போன்ற பணிகளில் மட்டுமே மூழ்கியுள்ளாராம். இவ்வாறு ஒரு தகவலை பிஸ்மி கூறியுள்ளார்.





