- Advertisement -
Homeபொழுதுபோக்குமாரி செல்வராஜின் தேவர் மகன் விவகாரம், இரண்டு சமூகத்துக்கும் நடுவே பிளவுதான் வரும்- ஓப்பனாக போட்டுடைத்த...

மாரி செல்வராஜின் தேவர் மகன் விவகாரம், இரண்டு சமூகத்துக்கும் நடுவே பிளவுதான் வரும்- ஓப்பனாக போட்டுடைத்த இயக்குனர் அமீர்

- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான “மாமன்னன்” திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வடிவேலுவின் நடிப்பு பலருக்கும் கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு இருந்ததாக ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே போல் பகத் பாசில் வில்லனாக மிக சிறப்பாக நடித்திருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.

“மாமன்னன்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் “தேவர்  மகன்” திரைப்படத்தை குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மாரி செல்வராஜ் தனது இளம் வயதில் “தேவர் மகன்” திரைப்படத்தை குறித்து விமர்சித்து எழுதிய கடிதமும் இணையத்தில் வைரல் ஆனது. அதனை தொடர்ந்து கமல்ஹாசன் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜை இணையத்தில் கடுமையாக சாடி வந்தனர்.

இந்த நிலையில் இயக்குனர் அமீர், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், மாரி செல்வராஜ் “தேவர் மகன்” குறித்து பேசியதை நினைவுப்படுத்தி அதற்கான கருத்தையும் கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த இயக்குனர் அமீர், “உண்மையை அப்படியே பேச வேண்டும் என்றால் இரு சமூகத்திற்கு இடையே பிளவு ஏற்படும். என்னை போன்றவர்கள் அதனை செய்வதற்கு விருப்பம் இல்லை. ஆனால் மாரி செல்வராஜ் பேசியதில் ஒரு நிஜம் இருக்கிறது. மாமன்னன் திரைப்படத்தில் ஒரு நிஜம் இருக்கிறது. மாரி செல்வராஜ் எழுதிய கடிதத்தில் ஒரு நிஜம் இருக்கிறது.

ஆனால் நான் கமல்ஹாசன் என்ற கலைஞனைத்தான் காண விரும்புகிறேனே தவிர, அவருக்குள் இருக்கும் சாதி சார்ந்த சிந்தனையை தேட விருப்பமில்லை. அவரது உன்னை போல் ஒருவன், விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் பல விமர்சனங்கள் எனக்கும் இருக்கிறது. அப்படிப்பட்ட வலியைத்தான் மாரி செல்வராஜும் வெளிப்படுத்தியிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதை எல்லாம் பார்த்தால் கமல்ஹாசனை ரசிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சற்று முன்