- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னதற்காகவா இப்படி? - தவெக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்த...

விஜய் மாமாவுக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்னதற்காகவா இப்படி? – தவெக ஆட்சி குறித்து கடுமையாக விமர்சித்த இயக்குனர் அமீர்!

- Advertisement -

ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் மிக கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவது முதல்வர் விஜயும் அவரது ஆட்சியும்தான். வெளிப்படையான ஆட்சி நடத்துவேன், மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா தொட மாட்டேன் என்று மேடையில் டயலாக் பேசிய விஜய், தொடர்ந்து தமிழக மக்களுக்கு பலத்த ஏமாற்றங்களை தந்து வருகிறார்.

முதல்வர் அறையில் அமர்ந்த விஜய், வழக்கமான முதல்வர் நாற்காலியை மாற்றிவிட்டு ரூ. 32 லட்சம் ரூபாய்க்கு சோபா டைப்பிலான ரோலிங் சேரில் அமர்ந்து பணி செய்து வருகிறார். 5.58 கோடி ரூபாய் செலவில் நாமக்கல் மாளிகை 10வது மாடிக்கு தனது முதல்வர் அறையையும் புதுப்பித்து மாற்ற உள்ளார்.

- Advertisement -

அத்துடன் சமீபத்தில் லண்டன் சென்று வந்த செலவு ரூ. 9 கோடி என்றும் மேட்டூர் அணை திறக்க சென்ற வகையில் ரூ. 6 கோடி செலவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 1200 கோடி ரூபாயில் பட்டிணப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டவும் விஜய் திட்டமிட்டுள்ளார். மேலும் சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தருமாறு பிரதமர் மோடிக்கு விஜய் கடிதமும் எழுதிய தகவலும் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்டங்களுக்கு விஜய் தன்னுடைய ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்கிறது. ஏற்கனவே அரசு பள்ளிகளில் திமுக அரசு துவங்கிய காலை உணவு திட்டம் செயல்பாட்டில் உள்ள நிலையில் நேற்று விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டம் என்று விஜய் ஒரு பள்ளிக்கு சென்று துவங்கி வைத்தார். சமூக இடைவெளி விட்டு குழந்தைகளுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிடுவது போல நடித்ததும் இணையத்தில் வைரலானது.

- Advertisement -

இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் விஜய் சென்ற போது அங்கு இருந்த பள்ளி குழந்தைகளின் புத்தக பைகள் டிடெக்டர் கருவி வைத்து சோதனை செய்யப்பட்டன. குழந்தைகள் தான் விஜய்க்கு ஆபத்தை ஏற்படுத்தப் போகிறார்களா? என்று பலரும் இதை கடுமையாக விமர்சித்த நிலையில் இயக்குனர் அமீரும் இதுகுறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திரைப்பட இயக்குனர் அமீர் தனது வலைதள பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது, விஜய் மாமாவுக்கு ஓட்டு போடச் சொன்னதற்காக இந்த பிஞ்சுகளின் புத்தகப் பைகளில் சோதனை? காலக்கொடுமை… இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ? என்று அதில் அமீர் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்