- Advertisement -
Homeபொழுதுபோக்குஅதிமுகவின் கூடாரமாக மாறிவரும் தவெக அரசியல் இயக்கம், கலாய்த்து தள்ளிய இயக்குனர் அமீர் - விஜய்...

அதிமுகவின் கூடாரமாக மாறிவரும் தவெக அரசியல் இயக்கம், கலாய்த்து தள்ளிய இயக்குனர் அமீர் – விஜய் கட்சிக்கு அவர் வைத்த புதிய பெயர்!

- Advertisement -

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய் 2 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்தது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. அதுவும் முதல் முறையிலேயே தமிழக சட்டசபைக்குள் முதல்வராக சென்ற ஒரே அரசியல்வாதியும் அவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 108 இடங்களை தனித்து நின்று ஜெயித்ததும் பெரிய விஷயமாக உள்ளது.

எனினும் விஜய் முதல்வர் ஆன பிறகு பிற கட்சிகளை சேர்ந்த பலரும் இப்போது அவரது கட்சியில் ஐக்கியமாகி வருகின்றனர். திமுக தீய சக்தி தவெக தூயசக்தி என்று பிரசாரம் செய்துதான் மக்களிடம் ஆதரவையும் அவர்களது ஓட்டுகளையும் பெற்று வெற்றி பெற்றார் விஜய்.

- Advertisement -

ஆனால் இப்போது ஊழல் செய்த மாற்று கட்சியினரை தன் கட்சியில் இணைத்துக் கொள்வது மாறுபட்ட ஒரு செயலாக முரண்பட்ட ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களின் ஆதரவுதான் தவெக ஆட்சி நடக்கிறது என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்க, இப்போது அதிமுகவின் மொத்த கூட்டமும் தவெக பக்கம் சாய்ந்து வருவதும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து திரைப்பட இயக்குனர் அமீர் சமீபத்தில் கூறுகையில், ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிமுகவினரை தவெகவில் சேர்த்துக் கொள்வதே ஊழல் ஒழிப்பு என்று நினைக்கின்றனர். ஊழல் செய்த யாரையும் விடமாட்டோம். எல்லோரையும் தேடித்தேடி எங்கு கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்கிற ரீதியில் தவெக செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது என்று அவர் விமர்சித்து இருந்தார்.

- Advertisement -

மேலும் தனது வாட்ஸ் அப் பதிவு ஒன்றில், ‘அதிதவெக’ தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் அண்ணா திராவிட தமிழக வெற்றி கழகத்திற்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என்றும் இரண்டு தினங்களுக்கு முன்பு அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததும் இணையத்தில் வைரலாகி அதிக கவனம் பெற்றது. இப்படி தொடர்ந்து தவெக குறித்து இயக்குனர் அமீர் விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கு முன்பு கரூரில் நடந்த சம்பவத்தில் 41 உயிர்கள் அநியாயமாக பலியானது குறித்து தற்போது ஆட்சியில் இருக்கும் தவெக அரசு விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து தெரிவிக்க வேண்டும். சட்டப்படி அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் நேற்று முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர் எம்எஸ்எம் ஆனந்தன் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்