சினிமா நடிகர்கள் ஆரம்பத்தில் காமெடி ரோலில் நடிக்கின்றனர். பிறகு மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகி விட்டால் பிறகு ஹீரோவாக மாறி விடுகின்றனர். ஒரு சிலர் ஹீரோவாக அறிமுகமாகி பெரிய நட்சத்திர நடிகர்களாக முன்னேறி விடுகின்றனர். அப்படி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற சில நடிகர்கள் ஒரு கட்டத்தில் அரசியல் களத்தில் குதிக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் அப்படி அரசியல் களத்தில் குதித்தவர்கள்தான். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் நடிகர்கள் கமல்ஹாசன் விஜயகாந்த் ராமராஜன் மன்சூர் அலிகான் கருணாஸ் சரத்குமார் கார்த்திக் டி ராஜேந்தர் சமீபத்தில் வரவான நடிகர் விஜய் வரை நிறைய பேர் லிஸ்ட்டில் வருகின்றனர்.
ஆனால் இதில் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றவர்கள் எம்ஜிஆரும் விஜயகாந்தும்தான். இப்போது அந்த வரிசையில் நடிகர் விஜயும் இருக்கிறார். ஆனால் வருகிற மே 4ம் தேதி தேர்தல் முடிவுதான் அவரது உணமையான செல்வாக்கை சொல்லப் போகிறது. ஏனெனில் விஜய் மீதான விமர்சனங்களும் சர்ச்சைகளையும் கடந்து அவர் வெற்றி பெறுவது சவாலான ஒரு விஷயம்தான்.
ஆனால் கடந்த 1994ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை தமிழக மக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகர் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு உச்ச நட்சத்திரம் நடிகர் ரஜினிகாந்த் தான். ஆனால் இதோ வர்றேன், அதோ வர்றேன் என்று சொல்லி கடைசியில் அவர் அரசியலுக்கு வராமல் பின்வாங்கி விட்டார் என்பதே கசப்பான உண்மை.
இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் அமீர் கூறியதாவது, எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிகாந்துக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பை அவர் தவற விட்டுவிட்டார். விஜயகாந்துக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் ரஜினியின் உயரத்தில் இல்லை. அதனால் எல்லா தரப்பு மக்களையும் அவர் போய் அடைய முடியவில்லை.
நடிகர் விஜய் எல்லா தரப்பு மக்களின் அன்பை பெற்று இருப்பது உண்மை. அதற்கான பலன் ஆக்க சக்தியாக மாறுமா என்பதை இனிமேல் அவரது எதிர்கால நடவடிக்கைகள் பேச்சுகளிலிருந்து தான் உணர முடியும் என்று இயக்குனர் அமீர் கூறியிருக்கிறார். தேர்தல் முடிவு வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் விஜய் குறித்து இயக்குனர் அமீர் வழக்கம் போல எதிர்மறையாக பேசாமல் நேர்மறையாக பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.





