தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களில் ஒருவராக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் இயக்குனர் அமீர். மௌனம் பேசியதே ராம் பருத்தி வீரன் ஆதிபகவன் இறைவன் மிகப்பெரியவன் போன்ற பல படங்களை இயக்கியவர் அமீர். மேலும் பல படங்களில் அமீர் நடித்திருக்கிறார்.
குறிப்பாக வடசென்னை பைசன் காளமாடன் போன்ற படங்களில் அமீர் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. அமீர் இயக்குனராக மட்டுமின்றி நடிகராக தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த போது அவரை வரவேற்ற இயக்குனர் அமீர், அதன்பிறகு இப்போது அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்து விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக நடிகர் விஜய் குறித்து பல தகவல்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அவரது மனைவி சங்கீதா, மகள் திவ்யா ஆகியோர் அவருடன் இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள் சில ஆண்டுகளாக லண்டனில் உள்ள சங்கீதாவின் பெற்றோர் வீட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
அதே போல் ஜேசன் சஞ்சய் சென்னையில் இருந்தாலும் அண்ணா நகரில் ஒரு அபார்ட்மெண்டில் அறை எடுத்து தங்கியிருக்கிறார் என்றும் அவர் இயக்கி வரும் சிக்மா படப்பிடிப்பு தளத்துக்கு ஒருமுறை கூட விஜய் நேரில் வரவில்லை என்றும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி பல ஆண்டுகளாகவே தன் தந்தை எஸ்ஏ சந்திரசேகரிடம் இருந்து விஜய் விலகி இருப்பது அனைவரும் அறிந்த விஷயம்தான்.
இந்நிலையில் இயக்குனர் அமீர் விஜய் குறித்து கடும் விமர்சனம் செய்து பேசியிருக்கிறார். இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியிருப்பதாவது, தவெக கட்சியில் விஜயுடன் இன்று இருப்பவர்கள் யாரும் அவருக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள். இதை தான் கடந்த கால அரசியல் வரலாறு சொல்கிறது. அதனால் அவர்களை விலக்கி வைத்துவிட்டு தனது தந்தையை அவர் அருகில் வைத்துக் கொண்டால் அது நல்ல வழிகாட்டுதலாக இருக்கும்.
ஏனென்றால் எந்த தகப்பனும் தன் மகன் கெட்டுப் போக வேண்டும், நாசமாக போக வேண்டும் என்று நினைக்க மாட்டார் என்று அமீர் கூறியிருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் விஜய் நடத்தும் தவெக கூட்டங்களில் அவரது பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் பங்கேற்கின்றனர். ஆனால் எஸ்ஏ சந்திரசேகருக்கு இதுவரை தவெகவில் எந்த பொறுப்பும் விஜய் தரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.





