- Advertisement -
Homeபொழுதுபோக்குதியேட்டரில் என் படங்களை பார்க்காமல் ஓடிடியில் பார்க்கறீங்களே? - ரசிகர்கள் மீது கோபப்பட்ட இயக்குனர் அனுராக்...

தியேட்டரில் என் படங்களை பார்க்காமல் ஓடிடியில் பார்க்கறீங்களே? – ரசிகர்கள் மீது கோபப்பட்ட இயக்குனர் அனுராக் காஷ்யப்!

- Advertisement -

இந்தி சினிமாவில் நட்சத்திர நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் அனுராக் காஷ்யப் இவர் தமிழில் மகாராஜா லியோ இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித் ஹீரோவாக நடிக்கும் லவ்வர் பாய் என்ற படத்திலும் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய நடிகர் அனுராக் காஷ்யப் கூறியதாவது, பல ஆண்டுகளுக்குப் முன்பு நான் இயக்கிய கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர் அக்லி தேவ் டி போன்ற படங்களை, இப்போது பார்த்து விட்டு ரசிகர்கள் அருமை என்று என்னிடம் சொல்கிறார்கள்.

- Advertisement -

ஆனால் அந்த படங்கள் வெளியான போது திரையரங்குகளில் சென்று பார்த்த ரசிகர்கள் மிகவும் குறைவுதான். இப்போது அந்த படங்களை பாராட்டி இப்படி சொல்லும் போது எனக்கு கோபமும் வருத்தமும் தான் வருகிறது. நான் அவர்களிடம் இந்த படத்தை எங்கே பார்த்தீர்கள் என்று கேட்டேன். யாருமே திரையரங்குகளில் பார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரு திரைப்படத்தை மக்கள் பார்த்து மற்றவர்களிடம் பரிந்துரைக்கும் அளவுக்கு திரையரங்குகளில் போதுமான காட்சிகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ அந்த வாய்மொழி விளம்பரம் உருவாகும் வாய்ப்பை வழங்குவதில்லை. இதன் விளைவாக இந்த படங்களை பார்க்க முடியாத பார்வையாளர்கள் ஓடிடி தளங்களில் பார்ப்பதற்கே பழகி விடுகிறார்கள்.

- Advertisement -

இது புதிய பார்வையாளர்களை உருவாக்கும் சூழலை பாதிக்கிறது. மாறாக பிரம்மாண்ட திரைப்படங்களுக்கான பார்வையாளர்களை மட்டுமே அவர்கள் உருவாக்குகிறார்கள். அப்படி இருந்தால் அத்தகைய பிரம்மாண்ட திரைப்படங்களே தொடர்ந்து தயாரிக்கப்படும். மிகவும் அதிக செலவில் அந்த படங்கள் உருவாகின்றன. மேலும் அவற்றின் வெற்றி தோல்வி விகிதமும் மிகப்பெரிய ஆபத்தை கொண்டு கொண்டது.

துரந்தர் போன்ற வெற்றிபெறம் உருவாகும் போது அதே நேரத்தில் ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைய கூடும். ஆனால் உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட திரைப்படங்கள் அதிக செலவானவை அல்ல. அவற்றுக்கு வாய்மொழி விளம்பரம் உருவாகும் வகையில் நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும் என்று நடிகர் அனுராக் காஷ்யப் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்