- Advertisement -
Homeபொழுதுபோக்குதாய்கிழவி ராதிகாவுக்கும் நூறு சாமி சுவாசிகாவுக்கு அந்த விஷயத்தில் இனி கடும் போட்டி ஏற்படும் -...

தாய்கிழவி ராதிகாவுக்கும் நூறு சாமி சுவாசிகாவுக்கு அந்த விஷயத்தில் இனி கடும் போட்டி ஏற்படும் – ஓபனாக பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவர் இயக்கிய தீனா கஜினி துப்பாக்கி ரமணா கத்தி சர்கார் போன்ற படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. கடைசியாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளியானது.

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி அஜய் திஷான் சுவாசிகா உள்ளிட்டோர் நடித்த நூறு சாமி படம் வருகிற 19ம் தேதி ரிலீஸாக உள்ளது. பிச்சைக்காரன் படத்துக்கு பிறகு இந்த படத்தில் சசி விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்துள்ளனர். தாய்மையை போற்றும் ஒரு கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

- Advertisement -

நூறு சாமி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸ் பேசியதாவது, நான் பிறந்த ஊரில் நடந்த நிஜக் கதைதான் இந்த நூறு சாமி படமாக உருவாகியுள்ளது. டிஸ்யூம் படத்தில் விஜய் ஆண்டனியை அறிமுகம் செய்ததால் ஒரு பெரிய ஹீரோவின் வாய்ப்பை சசி இழந்தார்.

இந்த படத்தில் சுவாசிகா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டு தாய்கிழவி படத்துக்காக ராதிகாவுக்கும் நூறு சாமி படத்துக்காக சுவாசிகாவுக்கும் இருவருக்கும்தான் கடும் போட்டியாக இருக்கும். எனக்கு முன்பே சசி இயக்குனர் ஆகி விட்டார். ஒருநாள் சசியிடம், நான் திரைப்படம் இயக்கப் போகிறேன் என்று சொன்னேன். வேலையை விட்டுவிட்டு இயக்குனர் வாய்ப்பை தேடுகிறாய்.

- Advertisement -

பசியோடு மட்டும் இருந்து விடாதே. உனக்கு எப்போது என்ன தேவை என்றாலும் என்னை அணுகலாம். நான் பண உதவி செய்கிறேன் என்றார். நாம் உதவி கேட்கும் சூழல் வருகிறதோ இல்லையோ ஆனால் நம்மை பசியோடு வாழ விடாமல் உதவி செய்ய ஒருவர் இருக்கிறார் என்பதே எவ்வளவு பெரிய தைரியம். அந்த சந்தோசத்தை நான் கஷ்டப்படும் நேரத்தில் சசி எனக்கு கொடுத்தார். தீனா படத்தை பாதியில் கைவிட்டு விடலாம் என முடிவெடுக்கும் நேரத்தில் சசியை சந்தித்தேன். அவர் எனக்கு வாழ்த்துகள் சொன்னார்.

ஆனால் நான் இந்த படம் நடக்காது என்றேன். படத்தில் சில விஷயங்கள் எனக்கு ஒத்துப் போகவில்லை. அதனால் படப்பிடிப்பு நடப்பதில் சிக்கல் உள்ளது என்றேன். படம் எடுக்க முடியவில்லை என விலகினால் அதுவே தோல்விக்கு சமம். எனவே முடிந்தவரை போராடு. நமக்கு 70 சதவீதம் படம் சரியாக வருகிறது என்றால் அது ரசிகர்களுக்கு 100 சதவீதம் சரியாக இருக்கும் என்று சசி என்னை ஊக்கப்படுத்தினார். தீனா படத்தை மீண்டும் நான் தொடர சசி தான் காரணம் என்று இயக்குனர் முருகதாஸ் அந்த நிகழ்ச்சியில் பேசினார்.

- Advertisement -

சற்று முன்