கோவையை சேர்ந்தவர் நடிகர் சிவக்குமார். பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே கோவைக்கு அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில்தான். ஆனால் சினிமா ஆசையில் சென்னைக்கு ரயில் ஏறினார். எதிர்பார்த்ததை போல சினிமாவில் அவர் பிரபலமான நடிகராக மாறினார். எம்ஜிஆர் சிவாஜி கணேசன் போன்றவர்களுடன் பல படங்களில் நடித்தார்.
அதன்பிறகு நடிகர் சிவக்குமாருக்கு திருமணமானது. சூர்யா கார்த்தி என்ற 2 மகன்களும், பிருந்தா என்ற ஒரு மகளும் இருக்கின்றனர். பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில் நடிகர் சிவக்குமார் கடந்த பல ஆண்டுகளாக நடிப்பதை நிறுத்தி விட்டார். சினிமாவில் மட்டுமின்றி சில டிவி சீரியல்களிலும் நடித்த சிவக்குமார், இப்போது முதுமை காரணமாகவும் முழுமையான ஓய்வில் இருந்து வருகிறார்.
இதில் நடிகர் சூர்யா, தன்னுடன் பல படங்களில் இணைந்து நடித்த மும்பையை சேர்ந்த நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். ஆரம்பத்தில் இதை விரும்பாத நடிகர் சிவக்குமார், பிறகு மகனின் ஆசைக்காக இந்த காதல் திருமணத்துக்கு சம்மதித்தார். திருமணத்துக்கு பிறகு நடிக்க கூடாது என்றும் ஜோதிகாவுக்கு சிவக்குமார் கண்டிசன் போட்டார்.
ஆனால் ஜோதிகாவால் நடிக்காமல் இருக்க முடியவில்லை. திருமணமான சில ஆண்டுகளில் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்தார். இதனால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையில்தான், கணவர் சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் அவர் குடியேறியதாகவும் அப்போதே பரபரப்பாக பேசப்பட்டது. இப்போது சென்னைக்கு சூர்யா, ஜோதிகா வந்தாலும் சென்னையில் உள்ள சிவக்குமார் வீட்டில் தங்காமல் ஓட்டலில் தங்குவதுதான் வழக்கமாக உள்ளது.
இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் கூறியதாவது, சென்னை தி நகரில் சூர்யா கார்த்தி இருவரும் இணைந்து பிரமாண்டமான பங்களா கட்டினார்கள். அதில் அனைத்து வசதிகளும் உள்ளது. ஆனால் சூர்யாவும் ஜோதியாகவும் மும்பைக்கு சென்று செட்டில் ஆகி விட்டார்கள். இடையிடையே சென்னைக்கு அவர்கள் வந்தாலும் இந்த வீட்டில் தங்குவதில்லை. மாறாக ஓட்டலில் தங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இப்போது ஈசிஆரில்ல் அவர்கள் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு பார்ட்டி போன்ற நிகழ்ச்சியும் இங்கு நடத்தினார்கள். சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினரும் அதற்கு சென்றார்கள். பொதுவாக நடிகர் சிவக்குமார் நிறைய நெறிகளை கடைபிடிப்பவர். அது மட்டுமின்றி மாமனார் சொன்னால் எந்த மருமகளும் கேட்பதில்லைதானே என்று வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கிறார். மாமனார் சிவக்குமார், மருமகள் ஜோதிகா இடையே நிலவும் பனிப்போர் காரணமாக, ஈசிஆரில் நடிகர் சூர்யா தனிவீடு கட்டி வருகிறார் என்பது அந்தணன் கூறியதன் மூலம் தெளிவாகி உள்ளது.





