தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். நடிகர் அஜீத்குமார் நடித்த தீனா படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அவர் அறிமுகமானவர். லைலா சுரேஷ்கோபி உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. வத்திக்குச்சி பத்திக்காதுடா என்ற பாடல் டிரண்டிங்கில் இருந்தது. தீனா படத்தில்தான் நடிகர் அஜீத்குமார் தல என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே அவரது பட்டப் பெயராக மாறியது.
தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த கஜினி, நடிகர் விஜயகாந்த் நடித்த ரமணா நடிகர் விஜய் நடித்த கத்தி துப்பாக்கி சர்கார் போன்ற படங்கள் பெரிய அளவில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸுக்கு வரவேற்பை பெற்று தந்தன. இந்தியில் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது.
மேலும் தமிழில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படமும் ஏமாற்றத்தை கொடுத்தது. இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. மதராஸி படத்தில் கன்னட ருக்மணி வசந்த் துப்பாக்கி பட வில்லன் நடிகர் வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் தவிர்த்து பல முன்னணி ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் ஏஆர் முருகதாஸ். குறிப்பாக ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் விஜயகாந்த் நடிப்பில் ரமணா அஜீத்குமார் நடித்த தீனா விஜய் நடித்த கத்தி துப்பாக்கி சர்கார் நடிகர் சூர்யா நடித்த கஜினி 7ம் அறிவு போன்ற படங்களை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம், ரஜினி விஜய் அஜீத்குமாருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேள்வி எழுப்பிய போது அதுகுறித்து அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார். அந்த நேர்காணலில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் விஜயை பொறுத்தவரை என்னிடம் சினிமா சம்பந்தமாக பேசுவாரே தவிர மற்ற எந்த நடிகர்களையும் பற்றியும் ஒருபோதும் அவர் பேசவே மாட்டார்.
அதேபோல் நடிகர் அஜீத்குமார் என்னிடம் பேசும்போது, சினிமா பற்றிக் கூட பேச மாட்டார். சினிமா தவிர மற்ற எல்லா விஷயங்களையும் என்னிடம் அவர் பகிர்ந்து கொள்வார். அதேபோல் நடிகர் ரஜினி சாருடன் நான் தர்பார் படத்தில் பணியாற்றியபோது, அவருடன் பேசினால் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் கே பாலச்சந்தர் இவர்கள் இருவர் பற்றியும் பேசாமல் இருக்கவே மாட்டார் என்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





