- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது… புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதா? இரட்டை வேடங்களில் அவர் நடித்த படங்கள்...

என்னது… புரட்சித்தலைவர் எம்ஜிஆர் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டதா? இரட்டை வேடங்களில் அவர் நடித்த படங்கள் இத்தனையா? – ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இன்னும் மங்காத புகழுக்கு சொந்தக்காரர் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் மட்டும்தான். கடந்த 1987ம் ஆண்டில் அவர் மறைந்து விட்டார். ஆனால் 37 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அவரது புகழ் சிறிதும் குறையவில்லை. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக மக்கள் விரும்பிய நல்ல அரசியல் தலைவராக இன்னும் எம்ஜிஆரின் புகழ் நிலைத்து விளங்குகிறது.

புரட்சித் தலைவர் எம்ஜிஆரை பொருத்த வரை அவரது நிர்வாக திறன் என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. எதை செய்தாலும் அதில் அவரது நிர்வாக திறமை வெளிப்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவரது ஆழமான பார்வையும் வாழ்க்கையின் அனுபவமும் இருக்கும். உலகமே போற்றும் ஒரு தலைவராக இருந்தாலும் அவர் மனிதாபிமானத்திலும் நேர்மையிலும் சிறந்து விளங்கினார்.

- Advertisement -

அதனால்தான் 3வது முறையாக அவர் தமிழக முதல்வராக தேர்தலில் போட்டியிட்ட போது அமெரிக்காவில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஜெயித்தார் என்று இப்போதும் புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார். ஒருவேளை எம்ஜிஆர் நீண்ட ஆயுளுடன் இன்றும் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் முதலமைச்சர் என்ற பதவியை யாருமே நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு சிறந்த பொற்கால ஆட்சி மக்களுக்கு தந்தவர் புரட்சித் தலைவர்.

எம்ஜிஆர் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். எனினும் அவர் டைரக்ட் செய்த நாடோடி மன்னன் படம் பாதி வரை கருப்பு வெள்ளையிலும் அதன்பிறகு ஈஸ்ட்மென் கலரிலும் வெளியானது. இதுதான் தமிழ் சினிமாவில் கலரில் வெளியான முதல் படம். அத்துடன் இந்த படத்தில்தான் கன்னடத்து பைங்கிளி என அழைக்கப்படும் நடிகை சரோஜா தேவி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

- Advertisement -

மேலும் நடிகர் எம்ஜிஆர் நடித்த ஒரு படத்துக்கு மட்டும் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்பதற்கான ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த படம் மர்மயோகி. ஆனால் அந்த படத்தில் இடம்பெற்ற பயங்கரமான திகில் காட்சிகளுக்காக ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்றபடி வன்முறை ஆபாச காட்சிகள் எதுவும் அந்த படத்தில் இல்லை. திகில் காட்சிகளுக்காக மட்டுமே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.

அத்துடன் இரட்டை வேடங்களில் ஹீரோ நடிப்பது அந்த காலகட்டத்தில் தொழில்நுட்ப ரீதியாக பெரிய சவாலாக இருந்தது. ஆனால் அந்த நிலையிலும் எம்ஜிஆர் மொத்தம் 16 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். குறிப்பாக எங்க வீட்டுப்பிள்ளை மாட்டுக்கார வேலன் நாளை நமதே நாடோடி மன்னன் உலகம் சுற்றும் வாலிபன் நீரும் நெருப்பும் நினைத்ததை முடிப்பவன் என எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த அனைத்து படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாகவும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றன.

- Advertisement -

சற்று முன்