- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இயக்கிய படங்களில் 2ம் பாகமாக அந்த படத்தை எடுக்கலாம் - ஓபனாக பேசிய இயக்குனர்...

நான் இயக்கிய படங்களில் 2ம் பாகமாக அந்த படத்தை எடுக்கலாம் – ஓபனாக பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஏஆர் முருகதாஸ். நடிகர் விஜய் ராணுவ வீரராக மேஜர் ஜெகதீஷ் என்ற கேரக்டரில் நடித்த படம் துப்பாக்கி. இந்த படம் கடந்த 2012ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகம் உருவாகுமா என்று விஜய் ரசிகர்கள் பல ஆண்டுகளாக கேட்டு வந்தனர்.

ஆனால் துப்பாக்கி 2 படம் உருவாவதற்கான எந்த சூழ்நிலையும் ஏற்படவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். அதே நேரத்தில் நடிகர் விஜயும் ஜனநாயகன் படத்துடன் சினிமாவை விட்டு விலகுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக முழு நேர அரசியலில் ஈடுபடவும் அவர் தயாராகிவிட்டார்.

- Advertisement -

அதனால் துப்பாக்கி 2 படம் உருவாக வாய்ப்பு இல்லை என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் உள்ளனர். இதற்கிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி என்ற படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்த நிலையில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் ஏஆர் முருகதாஸிடம், நீங்கள் இயக்கிய படங்களில் எந்த படத்தை 2ம் பாகம் எடுக்க விரும்புகிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து இயக்குனர் ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தை தான் நான் 2வது பாகமாக எடுக்க விரும்புகிறேன். நான் எடுத்த படங்களிலேயே 2ம் பாகம் எடுப்பதற்கான சிறந்த படம் துப்பாக்கி தான்.

- Advertisement -

இந்த படத்தில் லீவ் முடிந்து விஜய் திரும்ப பணிக்கு செல்வார். அதை 2ம் பாகம் எடுக்கும் ஐடியாவில் தான் அப்படி ஒரு காட்சியை உருவாக்கினேன். திரும்பி ஊருக்கு வரும்போது நடக்கும் சம்பவங்களை வைத்து 2ம் பாகம் கதையை உருவாக்கலாம் என்று யோசனையில் தான் அப்படி ஒரு கிளைமாக்ஸ் காட்சியை படத்தில் வைத்திருந்தேன். மேலும் துப்பாக்கி படத்தில் சத்யன் கதாபாத்திரம் கூட ஒவ்வொரு லீவுக்கு ஊருக்கு வரும்போதும் ஏதாவது ஒரு பிரச்னையில் சிக்க வைச்சுடறே என்று விஜயிடம் டயலாக் பேசுவார்.

இதையெல்லாம் நான் வேண்டுமென்றே 2ம் பாகத்திற்கான ஐடியாவில் தான் வைத்திருந்தேன். எனவே துப்பாக்கி படத்தின் 2ம் பாகம் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று ஏஆர் முருகதாஸ் கூறியிருக்கிறார். இதையடுத்து 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு மீண்டும் நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தால், மீண்டும் அவர் நடிக்க விரும்பினால் துப்பாக்கி 2 படம் உருவாகலாம் என்று தளபதி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்