- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி வீரவசனம் பேசாதீங்க, உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன பிரச்னை? உங்க கவர்ச்சி மட்டும் அரசியலுக்கு உதவாது...

இப்படி வீரவசனம் பேசாதீங்க, உங்களுக்கும் திமுகவுக்கும் என்ன பிரச்னை? உங்க கவர்ச்சி மட்டும் அரசியலுக்கு உதவாது – நடிகர் விஜய் குறித்து விமர்சித்த பிரபல இயக்குனர்!

- Advertisement -

தவெக தலைவர் நடிகர் விஜய் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, புதுசா கட்சி ஆரம்பித்து மக்கள் கிட்ட ஓட்டு கேட்க வந்தால் மக்களுக்கு என்ன பிரச்சனை இருக்கு? அதை தனது கட்சி எப்படி தீர்க்கும்? நாட்டில் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரலாம்? அதற்கு தன்கிட்ட என்னென்ன திட்டங்கள் இருக்குதுன்னு பேசணுமா?

இல்லே, உங்களுக்கு ஸ்டாலின் வேணுமா? இல்ல நான் வேணுமான்னு கேட்டால் அந்த தகுதி போதுமா ஒரு நாட்டை ஆள்வதற்கு? உங்க 2 பேருக்கும் என்ன பிரச்சனை என்று எங்களுக்கு தெரியலே. உங்க ரசிகர்களுக்கும் தெரியாதுன்னு தான் நினைக்கிறேன். அது என்ன எப்போ வந்தாலும் இரண்டு கட்சிக்குதான் போட்டி? அப்படி என்ன உங்களுக்கு திமுக மேல கோபம்ன்னு எங்களுக்கும் சொல்லுங்க விஜய்.

- Advertisement -

நாங்களும் சப்போர்ட் பண்றோம். அதை சொல்லாம நீங்க மட்டும் சினிமா டயலாக் பேசினா, ஏன் ஓட்டு போடணும்ன்னு மக்கள் கேக்குறாங்க இல்லே. இந்த 50 வருஷமா இருக்கிற கட்சிகள் மற்றும் 15 வருஷமா மக்களோடு மக்களாக களத்தில் நின்னு போராடி புதிய மாற்றத்தோடு தமிழகத்தை உருவாக்க மக்கள்கிட்ட வாக்கு சேகரிக்கும் கட்சிகள், எல்லாம் நிறைய இருக்கு.

எந்த விதத்தில் நீங்க அந்த கட்சிகளை விட உயர்வுன்னு சொல்லுங்க. எந்த போராட்டத்தில மக்களுக்காக மக்கள் கூட நின்னு இருக்கீங்க? இங்க இரண்டு கட்சிக்கு தான் போட்டின்னு சொல்ல. மனச்சாட்சி இல்லேன்னா நீங்க எப்படி மக்கள் தலைவனா மாறுவீங்க விஜய்? உழைப்பை முதலில் மதிங்க. உங்க கவர்ச்சி மட்டும் மக்களுக்கான அரசியல் இல்ல.

- Advertisement -

இனிமேலும் மக்கள்கிட்ட வீர வசனம் மட்டும் பேசாமல் ஒழுங்கா உங்க கட்சியோட கொள்கை திட்டம் எல்லாம் எல்லா இடத்திலும் பேசுங்க. உங்க தொகுதிகளிலும் என்ன பிரச்சனைகள் என்பதையும் அலசி ஆராய்ங்க. பொதுவா வீராவேஷமா பேச இது அரட்டை அரங்கம் இல்லை. மக்கள் களம். ஏற்கனவே நாங்க 50 வருஷத்தை இழந்துட்டு இருக்கோம்.

இப்போ நீங்க வந்து ஆட்டத்தை கலைக்காதீங்க. மறுபடியும் மக்கள் பிரச்சனை உணராத முதல்வர் எங்களுக்கு வேண்டாம். மக்களோடு மக்களாக நின்று எங்களை, எங்கள் இளைய தலைமுறையை வழிநடத்தும் தலைமையே எங்களுக்கு வேண்டும் என்று இயக்குனர் சேரன் அந்த பதிவில் கோபமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்