- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சசிக்குமாரை தெருக்கோடிக்கு அனுப்பியதே அந்த டைரக்டர்தான் - உண்மைையை போட்டுடைத்த பிரபலம்

நடிகர் சசிக்குமாரை தெருக்கோடிக்கு அனுப்பியதே அந்த டைரக்டர்தான் – உண்மைையை போட்டுடைத்த பிரபலம்

- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க, மதிக்கத்தக்க ஒரு நடிகராக, இயக்குநராக இருப்பவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம்தான் சசிக்குமார் இயக்கிய முதல் படம். அதற்கு முன், இயக்குநர் அமீரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார் சசிக்குமார். அதே போல், இயக்குநர் பாலா இயக்கிய முதல் படமாக சேதுவிலும் சசிக்குமார் பணிசெய்திருக்கிறார்.

சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றிக்கு பிறகு, சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் படத்தில் ஹீரோவாக நடித்தார் சசிக்குமார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஓடிப்போன காதலர்களுக்கு உதவும் நண்பர்கள், ஒரு கட்டத்தில் அந்த காதலர்கள் பிரிந்து விட்டால், அவர்களது நிலை என்ன என்பதை மிக அட்டகாசமாக சொன்ன படமாக இருந்தது.

- Advertisement -

சசிக்குமார், சமுத்திரக்கனி, அமீர், வெற்றிமாறன், கரு பழனியப்பன், சேரன் என இவர்கள் எல்லாருமே கதைகளை நம்பி படம் எடுப்பவர்கள். அதனால் இவர்கள் இயக்கும் படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறும். அல்லது வெற்றி பெறாவிட்டாலும், நிச்சயம் நல்ல படைப்பாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதனால் நடிகர், இயக்குநர் சசிக்குமார் சில சமயங்களில் படங்களில் நடிப்பது, இயக்குவது மட்டுமின்றி சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார். அப்படி படங்கள் தயாரித்த வகையில், ஒரு தயாரிப்பாளராக நிறைய நஷ்டங்களையும் சந்தித்து இருக்கிறார். அதனால்தான் தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடியாமல் சசிக்குமார் சற்று ஒதுங்கி இருக்கிறார்.

- Advertisement -

டைரக்டர் பாலா, நல்ல இயக்குநராக தன் படைப்புத் திறனை வெளிப்படுத்தினாலும் அவரிடம் பல குறைகள் இருக்கின்றன. குறிப்பாக தன் படத்தில் நடிப்பவர்களை அவர் அடிப்பது என்பது பலருக்கும் அதிருப்தியை தருகிறது. பரதேசி படத்தில் நடித்த போது நடிகர் அதர்வாவை பலமுறையால் குச்சியால் அடித்துள்ளார். நடிகை வேதிகாவையும் பயங்கரமாக டார்ச்சர் செய்துள்ளார். இப்போது வணங்கான் படத்தில் நடித்த ஒரு மலையாள நடிகையை அவர் தோள்பட்டையில் அடித்ததால், அந்த படத்தில் இருந்து விலகிவிட்டார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறுகையில், டைரக்டர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படம், சசிக்குமாரின் சொந்த படம். அவரே தயாரித்தார். ஒரு காட்சியை, டைரக்டர் பாலா பலமுறை திரும்ப திரும்ப எடுத்திருக்கிறார். செலவு மிகவும் அதிகமாக ஆகிறதே, ஏன் இப்படி எடுக்கிறீர்கள் என, சசிக்குமார் பாலாவிடம் கேட்டிருக்கிறார். அதை வைத்தே சசிக்குமாரை, பாலா பழிவாங்கி விட்டார். சசிக்குமார் மீது ஏற்பட்ட கோபத்தில் ஏகப்பட்ட செலவுகளை இழுத்து விட்டுவிட்டார். அதனால்தான் சசிக்குமார் தெருக்கோடிக்கே வந்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்