தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உள்ளவர் பாலா. கடந்த 25 ஆண்டுகளில் அவரது சினிமா பயணத்தில் இதுவரை 10க்கும் குறைவான படங்களையே தந்திருக்கிறார். கடைசியாக அவரது இயக்கத்தில் அருண் விஜய் நடித்த வணங்கான் படம், கடந்த ஜனவரி 10ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் பாலா படங்கள், மற்ற இயக்குனர்களின் படங்களை போல் இல்லாமல் வித்யாசமான ஜானரில் பயணிக்கும். குறிப்பாக அவரது படங்களில் அழகான நாயகி, காதல் காட்சிகள் இருந்தாலும் அந்த படத்தின் மையக்கதை காதலாக இருக்காது. இதற்கான காரணம் குறித்து சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் பாலா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் பாலா கூறியதாவது, லவ் ஸ்டோரி படங்களில் எனக்கு ஆர்வம் காட்ட முடியவில்லை. காமிக்க தெரியவில்லை. என்னுடைய போகஸ் முழுக்க கதையில்தான் இருக்கு. இது முக்கியமா, காதல் பண்ணிட்டு இருக்கிறது முக்கியமா, எனக்கு கதை தான் முக்கியம்.
காதலை மட்டுமே வைத்து படம் எடுப்பது என்று யோசிப்பதில் கூட எனக்கு உடன்பாடு இல்லை. சேது படம் லவ் ஸ்டோரிதான். ஆனால் அதில் இடைவேளை வரைக்கும்தான் காதல் படமாக இருக்கும். இடைவேளைக்கு அப்புறம் கதை அப்படியே மாறுது. செகண்ட் ஆப் சொல்றதுக்காக தான் பர்ஸ்ட் ஆப் என்பது புட்டேஜ் ஆக இருந்தது.
காலேஜ் பைட் பாட்டுகள் எல்லாமே புட்டேஜ்தான். அந்த இடத்துக்கு போகணும் என்றால் இங்கு நான் கொஞ்சம் பேஸ் எடுத்துக்கணும். அதே நேரத்தில் பிதாமகன் படத்தில் லைலா நடிக்க காரணம், ரசிகர்களுக்கு ஒரு எண்டர்டெயின்மெண்டும் தேவைப்படுகிறது. அது ஒரு சின்ன காம்பரமைஸ்தான்.
சிம்ரனும் அந்த படத்தில் இருந்தது. சிம்ரன் அந்த படத்தில் எதற்கு? அதுவும் ஹிட் ஆச்சு. அந்த ரெண்டு எண்டர்டெயின்மென்டும் இல்லேன்னா அந்த படம் ரொம்ப ராவா இருக்கும். புல்லா ஒரு ராவான படமாக பார்க்கிற மனநிலையில் ரசிகர்கள் இல்லை. அவர்களுக்கு பொழுதுபோக்கும் வேணும், கொஞ்சம் எமோசனலும் வேணும். வயலன்ஸ்சும் வேணும். நிறைய காமெடிகளும் வேணும், ஆனா அதை வலுக்கட்டாயமா கொடுக்காம இயல்பா கதையோட கொடுக்கணும் என்று அந்த நேர்காணலில் இயக்குனர் பாலா கூறியிருக்கிறார்.





