- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படத்தில் அப்படி ஒரு விஷயம் வருகிறதா? அப்போ படம் வேற லெவலா இருக்குப் போகுது…...

அமரன் படத்தில் அப்படி ஒரு விஷயம் வருகிறதா? அப்போ படம் வேற லெவலா இருக்குப் போகுது… – அதுக்கு முன்னாடி உலக நாயகன் செய்த தரமான சம்பவம்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது நடித்து முடித்துள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். இளம் ராணுவ வீரர் கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

அமரன் படத்துக்கு ஜிவி பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். அமரன் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், டெல்லி உள்ளிட்ட முக்கிய ராணுவ மையங்களிலும் படமாக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் கதையை மிகவும் ரசித்து படமாக்க அனுமதித்துள்ளார் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் நடிகர் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள கேரக்டர், தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் என்பவரது ராணுவ வாழ்க்கையாகும். அவர் மறைந்துவிட்ட நிலையில், அவரது வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இந்த அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமரன் படம் உருவாக காரணமாக இருந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் குடும்பத்துக்கு ஒரு பெரிய தொகையை சன்மானமாக தர முன்வந்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். படத்தின் தயாரிப்பு நிறுவனமும் அவருடையது என்பதால் ஒரு தயாரிப்பாளராகவும் இந்த சன்மானத்தை வழங்க முன்வந்துள்ளார்.

ஆனால் கமல்ஹாசன் கொடுக்க முன்வந்த அந்த பெரிய தொகையை பெற, முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் முதலில் மறுத்துவிட்டனர். அவரை பற்றிய படம் தயாரிப்பதே எங்களுக்கு பெருமைதான். இந்த பணம் எல்லாம் வேண்டாம் என மறுத்து இருக்கின்றனர். எனினும் கமல்ஹாசன் விடாப்பிடியாக போராடி அவர்களை வற்புறுத்தி சம்மதிக்க வைத்து, அந்த பெரிய தொகையை கொடுத்துவிட்டு திரும்பியிருக்கிறார் கமல்ஹாசன்.

இதுமட்டுமின்றி அமரன் படத்தில் கிளைமாக்ஸில், மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த ஒரு புட்டேஜ் ஒன்றை காட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அவரது ராணுவ வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை சொல்லும் விதமாக இந்த காட்சிகளை படத்தில் காட்ட உள்ளனர் என்பதால், படம் இன்னும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சற்று முன்