தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று கன்னியாகுமாரி மாவட்டத்துக்குச் சென்ற நடிகர் விஜய் தேர்தல் பிரசாரத்தின் போது கேரவனை விட்டு இறங்கி சிறிது தூரம் சைக்கிளில் சென்றார். வேகமாக அவர் சைக்கிள் ஓட்டுவதை பார்த்து பலரும் அசந்து போயினர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தனது எக்ஸ் பதிவில் விஜய் குறித்து விமர்சித்திருக்கிறார். அதில் சேரன் கூறியிருப்பதாவது, இட ஒதுக்கீடு பிரச்னைக்கு தவெக வுல ஒரு தீர்வு பேச சொல்லுங்க யாரையாவது. அப்போ நம்ம தவெக பற்றி பேசுவதை நிறுத்திக்கலாம்.
சைக்கிள் ஓட்டுனா வில்லு விட்டா இந்த பிரச்சனைக்கான தீர்வுக்கு விஜய் என்ன நினைக்கிறார் என்று மக்களுக்கு புரிஞ்சிருமா? ஏன் தம்பிகளா விஜய் சைக்கிள் ஓட்டுனா ஓட்டு போட நாங்க என்னடா தம்பிகளா சைக்கிள்ல பால் வியாபாரம் பண்ற கடையை வைச்சிருக்கோம்?
இல்ல பேரணியா மக்கள் முன்னால 1000 தொண்டர்களோட சைக்கிள் ஓட்டுங்க, அது ஒரு ஓட்டு கேட்கும் யுக்தியா எடுத்துக்கிறோம். ரோட்டுல சர்க்கஸ் காட்டுறீங்க? மக்கள் என்னடான்னா என்னடான்னு யோசிப்பாங்கன்னு சிந்திக்க மாட்டீங்களா?
இருளர் கம்யூனிட்டி எவ்வளவு இடத்துல எத்தனை சதவீதம் இருக்காங்க? எப்போ அவங்க உள் ஒதுக்கீடுல வந்தாங்க? அதுவரை அவர்களுக்கு அரசு என்ன கொடுத்துச்சு? என்ன கொடுக்கலே? ஏன் கிடைக்கலே? அதை பேச சொல்லுங்க உங்க தலைவரை பேப்பர் இல்லாம என்று இயக்குனர் சேரன் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.
இயக்குனர் சேரன் நடிகர் விஜய் முன்னணி நட்சத்திர நடிகராக இருக்கும் போது அவரது இயக்கத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் சில காரணஙகளால் விஜய் அவரது இயக்கத்தில் நடிக்க முடியவில்லை. அந்த வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் இப்போது விஜய் மீது சேரன் காட்டி வருகிறார். ஒரு நடிகர் மக்கள் தலைவராக உருவானதை சேரன் போன்றவர்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை என்று தளபதி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.





