- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஆளுமையை அசாத்திய துணிச்சலை அவரிடம் மட்டும்தான் நான் பார்க்கிறேன் - இன்று...

அந்த ஆளுமையை அசாத்திய துணிச்சலை அவரிடம் மட்டும்தான் நான் பார்க்கிறேன் – இன்று முதல்வர் விஜயை சந்தித்த பிரபல நடிகை பெருமிதம்!

- Advertisement -

நடிகர் விஜயுடன் கத்தி மெர்சல் தெறி உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை சமந்தா. இன்று தமிழக முதல்வர் விஜயை நடிகை சமந்தா நேரில் சந்தித்து பேசி இருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை சமந்தா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த பதிவில் நடிகை சமந்தா கூறியிருப்பதாவது, இன்று நான் சென்னையில் தரை இறங்கிய போது எனக்குள் ஒரு எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் நம்முடைய முதலமைச்சரை சந்திக்க சென்று கொண்டிருந்தேன். விஜய் சார் எப்போதுமே திரையில் மட்டும் கதாநாயகனாக இருக்க வேண்டியவர் இல்லை என்று நான் நினைப்பதுண்டு.

- Advertisement -

அவருடைய ஆற்றல் அவருடைய ஆளுமை மற்றும் மக்கள் அவர் மீது காட்டும் அன்பு ஆகிய அனைத்தும் அவர் இதைவிட பெரிய ஏதோ ஒன்றுக்காக உருவாக்கப்பட்டவர் என்பதை உணர்த்தி இருக்கின்றன. எல்லாவற்றையும் விட அவரிடம் அதிகமாக இருப்பது எதுவென்றால் ஒரு புதிய களத்தில் கால் பதிப்பதற்கு தேவைப்படும் அந்த துணிச்சல் தான்.

ஏற்கனவே நாம் சாதித்து முத்திரை பதித்த ஒரு துறையை விட்டுவிட்டு சவால்களும் பொறுப்புகளும் மிக அதிகமாக உள்ள ஒரு புதிய களத்தை கையில் எடுப்பது சாதாரண விஷயம் இல்லை. அது எளிதானது என்பதால் அல்ல. மாறாக நம்மால் ஒரு நல்ல மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையால் தான் அவர் அதை செய்கிறார். நம் எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலகட்டத்தில் நாம் இன்னும் அதிகமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.

- Advertisement -

நம்மை தாண்டி இந்த சமூகத்திற்கு நம்மால் என்ன பங்களிப்பை தர முடியும் என்று நம்மையே நாம் கேட்டுக் கொள்ளும் தருணம் அது. ஆனால் மிகச் சிலரே அந்த அழைப்பிற்கு செவி சாய்த்து செயலில் இறங்குகிறார்கள். ஏற்கனவே விஜய் சார் மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருப்பவர்களை அவர் இன்னும் ஆச்சரியப்படுத்துவார் என்ற ஓர் எண்ணம் எனக்குள் இருக்கிறது.

அவர் இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க தேவையான வலிமையும் ஞானமும் துணிச்சலும் அவருக்கு கிடைக்க வாழ்த்துகிறேன். மேலும் இதை பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் நீங்கள் ஆரம்பத்தில் கண்ட கனவை விட உங்கள் வாழ்க்கை மிகப் பிரம்மாண்டமானதாக மாறக்கூடும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்