- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சிவகார்த்திகேயன் படங்களில் என்னை நடிக்க சொன்னாங்க, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் - வெளிப்படையான சொன்ன...

விஜய் சிவகார்த்திகேயன் படங்களில் என்னை நடிக்க சொன்னாங்க, நான் முடியாதுன்னு சொல்லிட்டேன் – வெளிப்படையான சொன்ன இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். குறிப்பாக அவர் இயக்கிய பாரதி கண்ணம்மா பொற்காலம் தவமாய் தவமிருந்து பாண்டவர் பூமி ஆட்டோகிராப் வெற்றிக்கொடி கட்டு பொக்கிஷம் உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பாராட்டை பெற்ற படங்களாக இருந்தன.

இதில் ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் இயக்குனர் சேரனே படத்தில் நாயகனாகவும் நடித்திருந்தார். அத்துடன் மற்ற இயக்குனர்கள் இயக்கிய படங்களிலும் சேரன் நடித்தார். சொல்ல மறந்த கதை ராமன் தேடிய சீதை பிரிவோம் சந்திப்போம் போன்ற சில படங்களிலும் அவர் நடித்திருக்கிறார்.

- Advertisement -

ஆரம்பத்தில் கேஎஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணிசெய்தவர் சேரன். அவரது படங்களில் பணிபுரிந்த அனுபவத்தில் அவரும் இயக்குனராக மாறி இயக்கிய முதல் படம்தான் பாரதி கண்ணம்மா. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து சேரனை தமிழ் சினிமாவில் முன்னிலைப்படுத்தியது. தொடர்ந்து அவர் நல்ல திரைக்கதை அம்சமுள்ள படங்களை தமிழ் சினிமாவுக்கு தந்தார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் சேரன் கூறியதாவது, என்னுடைய படத்தில் நடித்த எல்லா நடிகர்களுமே அளவோடு தான் நடிச்சு இருப்பாங்க. ஓவர் ஆக்டிங் பண்ண மாட்டாங்க. தவமாய் தவமிருந்து படத்தில் ராஜ்கிரண் படம் முழுவதும் நடிச்சிருப்பார். ஆனால் ஒரு இடத்தில் கூட ஓவர் ஆக்டிங் இருக்காது.

- Advertisement -

அப்போ எல்லோரையும் நான் சரியா நடிக்க சொல்றேன்னா, நான் ஹீரோவா நடிக்கிற படத்துல என்னை நான் கண்ட்ரோல் பண்ணி நடிக்கத் தெரியணும். அது ரொம்ப முக்கியம். அப்படி இயல்பா வருகிற கதாபாத்திரம்தான் எனக்கு சரியா இருக்கும். அதனால்தான் நான் கதைகளை படங்களை தேர்ந்தெடுத்து பண்றேன்.

ஆட்டோகிராப் படத்தின் வெற்றிக்கு அப்புறம் விஜய் சிவகார்த்திகேயன் நடிக்கிற படங்களில் எனக்கும் நடிக்கிற வாய்ப்பு வந்தது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்னை நடிக்க சொல்லி கேட்டாங்க. கில்லி மாதிரி கதைகள் வந்தது. ஆனால் அந்த மாதிரி என்னால நடிக்க முடியாது. நமக்கு ஜீப்புல பறந்து போற மாதிரி படங்கள் எல்லாம் செட் ஆகாது என்று சொல்லிட்டேன் என்று இயக்குனர் சேரன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்