- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், விஜயும் ஒன்றுதான், அசையவே மாட்டாங்க - தன்னுடைய அனுபவம்...

அந்த விஷயத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், விஜயும் ஒன்றுதான், அசையவே மாட்டாங்க – தன்னுடைய அனுபவம் குறித்து பகிரங்கமாக பேசிய இயக்குனர் சேரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 69வது படம். இந்த படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு பிறகு நடிகர் விஜய் சினிமாவில் நடிப்பதில்லை என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். அதனால் அவரது கடைசி படம் ஜனநாயகன் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஒன்ஸ்மோர் என்ற படத்தில் பல ஆண்டுகளுக்கு முன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகை சரோஜா தேவியும் நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடித்திருந்தார். எஸ்எஸ் சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற படமாக இருந்தது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜய் குறித்து பேசிய இயக்குனர் சேரன், சிவாஜி கணேசனுடன் நடிகர் விஜயை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்தும் அதை சில காரணங்களால் நழுவ விட்டு விட்டேன் என்றும் இயக்குனர் சேரன் வருத்தப்பட்டு இருக்கிறார்.

அந்த நேர்காணலில் மேலும் இயக்குனர் சேரன் கூறியதாவது, பொதுவாக ஹீரோயிசம் பண்ற மாதிரியான கதைகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை. அந்த மாதிரி ஆரம்பத்தில் இருந்தே நான் நினைக்கவில்லை. ஆனால் ஆட்டோகிராப் படம் முடித்த பிறகு விஜய் என்னிடம் கதை கேட்டார். வேறோரு நிறுவனம் தயாரிப்பில் அந்த படத்தை நான் இயக்க எனக்கு தேதி கொடுத்தார். கதை ரொம்பவும் பிரமாதமாக இருக்கிறது என்று சொன்னார்.

- Advertisement -

விஜய் ரொம்பவும் சின்சியர் அண்ட் டெடிக்கேட்டிவ் ஆன ஆர்ட்டிஸ்ட். கதை கேட்கும் போது எந்த டைவர்ஷனும் இல்லாமல் கிளீனா போகஸ் ஆப் சப்ஜெக்ட்டை கேட்டுட்டு, நீங்க ரெண்டு மணி நேரம் இல்லே, மூன்று மணி நேரம் சொன்னாலும் ஒரு இம்மி கூட நகர மாட்டார். ஒரு இம்மி கூட அசையவோ போயிட்டு வரவோ அதெல்லாம் செய்ய மாட்டார்.

கதையை சுருக்கமா சொல்லுங்க, சீக்கிரமா சொலுங்க அப்படி எல்லாம் கேட்க மாட்டார். அப்படியே உட்கார்ந்து பொறுமையா கேட்டுட்டு இருப்பார். சிவாஜி சாருக்கு அப்புறம் நான் அப்படி கவனமாக கதை கேட்கிற நடிகராக விஜயை பார்க்கிறேன். சிவாஜி சாருக்கு கதை சொல்லும்போது இப்படிதான் கவனமாக இருப்பார். தேசிய கீதம் படத்தில் அவர்தான் முதலில் நடிப்பதாக இருந்தது என்று அந்த நேர்காணலில் விஜய் குறித்து இயக்குனர் சேரன் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்