நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் பெரிய வெற்றியை பெற்றது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. இந்த படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் அளவுக்கு மற்ற மொழிகளில் குட் பேட் அக்லி படம் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை என்பதால் இந்த படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு 75 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த போது அந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே நிறைய முட்டல் மோதல் கருத்து வேறுபாடுகள் பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் வேண்டா வெறுப்பாக தான் அந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தொடர்ந்து தயாரித்ததாகவும், வேண்டா வெறுப்பாக தான் ஆதித் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தை ஒருபோதும் தயாரிப்பதில்லை என்ற முடிவில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும், அதே போல் அந்த நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்குவதில்லை என்ற உறுதியான முடிவில் ஆதிக் ரவிச்சந்திரனும் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரனே டைரக்ட் செய்ய இருக்கிறார். அந்த படத்தை தயாரிக்க முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் எதுவும் முன்வரவில்லை. குறிப்பாக வேல்ஸ் பிலிம் நிறுவனம், சன் பிக்சர்ஸ் நிறுவனம், சத்யஜோதி பிலிம்ஸ், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் ஏசியன் நிறுவனம் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முன் வராத நிலையில், அஜீத்குமார் படத்தை யார் தயாரிப்பது என்பதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே அஜீத்குமார் தனது சம்பளத்தை ரூ. 180 கோடி என்பதை ரூ. 100 கோடியாக குறைத்தால் அந்த படத்தை தயாரிப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் கூறியுள்ளது ஆனால் அஜீத் தரப்பில் ரூ. 130 கோடி சம்பளம் என்று கறாராக பேசப்பட்டிருக்கிறது. மேலும் நடிகர் அஜித்குமார், தனது முழு சம்பளத்தையும் ஷூட்டிங் முடிவதற்குள் தர வேண்டும். முதலில் பெரும்தொகையாக அட்வான்ஸ் தர வேண்டும். மீதி பணத்தை பணம் சூட்டிங் முடிவதற்குள் தந்துவிட வேண்டும். அதுவும் முன்தேதியிட்ட செக்குகளாக தந்துவிட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதனால் தயாரிப்பு நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன. அதனால்தான் எந்த நிறுவனமும் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பயங்கர அப்செட்டில் இருக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது மாமனார் நடிகர் பிரபுவின் சிவாஜி பிலிம்ஸ் மூலமாக ஏகே 64 படத்தை தயாரிக்கும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்து தனது மாமனார் பிரபுவிடம் பேசி ஒரு முடிவு எடுக்கவும் அவர் தீர்மானித்திருக்கிறார். ஆனால் அஜீத்குமாரின் கண்டிஷன்களுக்கு சிவாஜி பிலிம்ஸ் நிர்வாகம் ஒத்துக் கொள்ளுமா, நடிகர் பிரபு அவற்றை ஏற்றுக் கொள்வாரா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. ஏற்கனவே அஜீத்குமார் நடித்த அசல் படத்தை தயாரித்து சிவாஜி பிலிம்ஸ் பலத்த நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.





